Show all

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் சென்னையில் கமலுடன் நாளை சந்திப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சென்னையில் நாளை நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பேச உள்ளார். நடிகர் கமல்ஹாசனும் அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். தனிக்கட்சியை விரைவில் தொடங்க இருப்பதாக கூறி வருகிறார்

கீச்சுவை தமது அரசியல் ஆயுதமாகவும் அவர் பயன்படுத்தி வருகிறார். விஜய் தெலைக்காட்சி நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பொடி வைத்து பேசும் அரசியல் நையாண்டிகள் தலைப்பு செய்திகளாகி விடுகின்றன.

இதனிடையே கமல்ஹாசன் மார்க்சிஸ்ட் கட்சியில் சேருகிறார் என தகவல் பரவியது. அதை கமல்ஹாசன் மறுத்திருந்தார்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கமல்ஹாசனைச் சந்திக்க உள்ளார். சென்னையில் இச்சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இச்சந்திப்பின் போது கமல்ஹாசனை ஆம் ஆத்மி கட்சியில் சேருமாறு அரவிந்த் கேஜ்ரிவால் அழைப்பு விடுக்கலாம் என தெரிகிறது. இருப்பினும் தனிக்கட்சி தொடங்குவேன் என ஏற்கனவே கமல்ஹாசன் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2 ஆண்டுகளுக்கு முன்னர் கேஜ்ரிவாலை டெல்லியில் கமல்ஹாசன் சந்தித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.