Show all

மருத்துவர் ஐயா, தேர்தல்லே நாங்கதான் நாடி பிடிச்சுப் பார்த்து நீங்க பிழைப்பிங்களா மாட்டிங்ளான்னு சொல்லனும்: தமிழக மக்கள்

13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிக்கப் போவதுதான் வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் நடந்த பாமக தலைவர் ஜி.கே.மணியின் இல்ல விழாவில் அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் கூட்டணியை அறிவிக்கும் அதிகாரம் கட்சியின் தலைவர் ராமதாசுக்குத்தான் உள்ளது, பாமக அறிவிக்கும் கூட்டணியே வெற்றிக் கூட்டணி என்றார்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது. அண்மையில் கோவையில் நடந்த பாமக பொதுக்குழுக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் விரைவில் அறிவிப்பார். அந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும் என்றார் அன்புமணி.

ஒங்க நாடியிலே பாஜக பித்தம் அதிகமாச்சுன்னா ஒங்க கதையை தமிழக மக்கள் முடிச்சிருவாங்களே மருத்துவரய்யா அப்புறம் எங்க வெற்றி..கூட்டணி...

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,044.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.