Show all

குதிரைகள் உள்ளிட்ட விலங்குகள் கொத்து கொத்தாக மரணம்! பணக்கார நாடான ஆஸ்திரேலியாவில் மழையில்லாமல் வறட்சி

13,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதுவரை எப்போதும் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய வறுமையும் வறட்சியும் ஏற்பட்டிருக்கிறது. கடந்தகாலத்தில் ஆஸ்திரேலியாவின் நிலைமை இந்தளவுக்கு மோசமானதாக இருந்ததே இல்லை. 

தற்போது ஆஸ்திரேலியா கடுமையான வறட்சியை எதிர்கொள்ளக் காரணம், கடந்த பல மாதங்களாக அங்கே மழை இல்லாததே. அதிலும் குறிப்பாக கிழக்கு ஆஸ்திரேலிய பகுதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. நிலத்தடி நீரும் இந்தப் பகுதியில் வெகுவாகக் குறைந்துவிட்டது. எனவே, செய்வதறியாது தவிக்கின்றனர் மக்கள். 

ஓடையில் இருந்த தண்ணீர் வற்றியதால் 40-க்கும் மேற்பட்ட காட்டுக் குதிரைகள் தண்ணீரின்றி செத்துக்கிடந்தன. குதிரைகள் தவிர, வெளவால்கள், குரங்குகள் போன்ற உயிரினங்களும் வெப்பத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள முரே மற்றும் டார்லிங் ஆகிய இரண்டு ஆறுகள் வற்றிப்போனதால் கரையில் ஒரு மில்லியன் மீன்கள் வரை இறந்துள்ளன. ஆறுகள் வற்றியதும் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உலகின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து வருவது உலகறிந்த விசயம். அதன் விளைவின் ஒருபகுதிதான் இதுவும். தற்போது இங்கே ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமை உலகம் முழுவதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் எல்லாச் சூழலியலாளர்களும் உலக அரசாங்கங்களை உரிய நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால், அரசாங்கங்கள் காலம் தாழ்த்திக்கொண்டே இருக்கின்றன

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,044.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.