Show all

சின்மயி! உங்களுக்கு பின்னால் நிறைய பேர் திரளுவார்கள். வைரமுத்துக்குப் பின்னால் ஒருவர் கூட வரமாட்டார்கள்.

03,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சின்மயி குற்றச்சாட்டு, பொதுமக்கள், குறிப்பாக தமிழ்மக்கள் யாரும் தடலடியாக தீர்ப்பு சொல்லி விட முடியாத குற்றச்சாட்டு. வேண்டுமானால் சின்மயிக்கு ஆதரவாக வைரமுத்து அவர்கள் மீது தவறு இருக்கக் கூடும் என்று ஆண்கள் மட்டும் சொல்லலாம். தமிழ்ப் பெண்கள் யாரும் துணிச்சலாக வைரமுத்து அவர்களை நியாயப் படுத்தி கருத்து சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் அவர்கள் ஒழுக்க துலாவில் நிறுக்கப் படுவார்கள். சின்மயி மீது எந்த ஆணும் குற்றச்சாட்டு சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால், அவர்கள் ஒழுக்கத் துலாவில் மட்டுமல்ல, பெண்ணியம் குறித்த துலாவிலும் நிறுக்கப் படுவார்கள்.

ஆண்டாள் சிக்கலில் நாடே வைரமுத்துவுக்கு ஆதரவாக எழுந்தது. சின்மயி சிக்கலில் இன்னும் ஒருவர் கூட வைரமுத்துவுக்கு ஆதரவாக கருத்துச் சொல்லவில்லை. இது வைரமுத்து அவர்கள் குற்றவாளியாக இருக்கக்; கூடும் என்ற நிலைப்பாட்டில் அல்ல. வைரமுத்துவுக்கு ஆதரவு காட்டப் போய் நாம் குற்றவாளியாகி விடக் கூடாது என்கிற தமிழ்ச்சமூக அச்சத்தில்தான். 

வைரமுத்து மீது வழக்கு தொடுக்க அதற்கு ஆதாரமான எல்லைக்கடவு கிடைக்கவில்லை. அதைதான் வீட்டில் தேடி கொண்டிருக்கிறேன். அது கிடைத்தவுடன் நிச்சயம் வழக்கு தொடுப்பேன் என்று சின்மயி தெரிவித்துள்ளார்.

திருமணத்தின்போது எனது மாமனார், மாமியாருக்கு வைரமுத்து விவகாரம் தெரியாது என்பதால் காலில் விழாமல் தவிர்க்க முடியவில்லை. வைரமுத்து எனது திருமணத்திற்குப் பிறகு ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு அழைத்தார். ஆனால் நான் போகவில்லை என்கிறார் சின்மயி. 

ஆண்டாள் சர்ச்சைக்கும் இதற்கும் தொடர்பில்லை. நான் ஆண்டாள் விவகாரம் தொடர்பாக ஒரு கீச்சு கூட போட்டதில்லை. இதில் அரசியல் தேவையில்லை. இந்த 'எனக்குந்தான். சந்திப்புஎடுப்பு' விவகாரத்தில் எல்லோருமே சிக்கி வருகின்றனர். இதில் பாகுபாடே இல்லை. இடது, வலது என்று எல்லோருமே சிக்குகின்றனர். என் மீது அரசியல் சாயம் பூசாதீர்கள்.

பாஜக என்றில்லை, பத்திரிகையாளர், கடவுள் நம்பிக்கை உடையவர், இல்லாதவர், கார்ப்பரேட் முதற்கொண்டு அமைச்சர்கள் வரை பெயர்கள் அடிபட்டுள்ளன. பெண்களுக்கு இந்த 'எனக்குந்தான். சந்திப்புஎடுப்பு' ஒரு நல்ல வாய்ப்பு. அதனால் சம்பந்தப்பட்டவர்களை இனி கேள்வி மேல் கேள்வி கேட்கவே செய்வோம்.

வைரமுத்து மீது கண்டிப்பாக வழக்கு தொடுப்பேன். ஏனென்றால் அவர் ஒரு சரியான ஆள் இல்லை. எந்த ஆண்டு வெளிநாட்டு சம்பவம் நடந்தது என சரியாக ஞாபகம் இல்லை. நான் போய் வந்த எல்லைக்கடவில் முத்திரை மற்றும் நிகழ்ச்சி நடந்ததற்கான ஆதாரம் எல்லாம் என்னிடம் உள்ளது.

அதைதான் வீட்டில் தேடி கொண்டிருக்கிறேன். அதுதான் எனது வழக்குக்கு ஆதாரம். அதனால்தான் இதுவரை நான் வழக்கு தொடுக்கவில்லை. இது ஏதோ சும்மா 'சந்திப்புஎடுப்பு' போட்டுவிட்டுப் போகும் விசயம் அல்ல. இது சம்பந்தமாக சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பேன் என்றார் சின்மயி.

சின்மயி! உங்களுக்கு பின்னால் நிறைய பேர் திரளுவார்கள். வைரமுத்வுக்குப் பின்னால் ஒருவர் கூட வரமாட்டார்கள். அறங்கூற்றுமன்றம் மட்டுமே இதில் கேள்வி கேட்க முடியும், கருத்து சொல்ல முடியும். ஆதாரங்கள் அடிப்படையில் யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவாகத் தீர்ப்பும் சொல்ல முடியும் அறங்கூற்றுமன்றத்தை யாரும் ஒழுக்கத் துலாவிலோ, பெண்ணியத் துலாவிலே நிறுக்க முடியாது. ஆறங்கூற்று மன்றம் உங்களில் யாரைக் குற்றவாளி என்று நிறுவுகிறதோ அவர்ளுக்கு தமிழ்மக்கள் தரும் தண்டனை மிகமிகக் கேவலமாக இருக்கும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,946.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.