Show all

தமிழிசை போலவே தமிழக முதல்வரும் நடத்திய இருக்கைத் திருவிழா

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டங்கள் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரையில் தொடங்கிய கொண்டாட்டம் இதுவரை 25 மாவட்டங்களில் நடந்து முடிந்து 26 வது மாவட்டமாக ராமநாதபுரம் பட்டினம் காத்தான் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான மேடையில் நடைபெற்று வருகிறது.

10,000 பேர் அமரக்கூடிய பிரமாண்டமான பந்தலில் இரவைப் பகலாக்கும் மின்னொளியில் மாலை 3.30 மணிக்கு விழா தொடங்கியது.

மேடையில் முதல்வர் மற்றும் தமிழக அமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவப் படங்களுக்கு மலர்த் தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பு அஞ்சல் அட்டை வெளியிடப்பட்டது.

இரட்டை இலைச் சின்னம் அம்மாவால் ஒதுக்கப்பட்ட குடும்பத்தினர் கைகளில் கிடைக்காமல் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது.

அம்மாவின் உண்மைத் தொண்டர்களின் கைகளில் இரட்டை இலைச் சின்னம் கிடைத்திருக்கிறது. இரட்டை இலையை மீட்டுக் கொண்டு வரும் பணியில், கழகத் தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டதால்தான் இரட்டை இலை கிடைத்தது. என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இவ்வாறு முதல்வர் பேசிக்கொண்டிருக்கும்போதே மக்கள் வெளியேறியதால் விழா அரங்கு காலியாக காட்சி அளித்தது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,617

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.