Show all

அமெரிக்கா, இந்தியா கண்டனங்களைப் பொருட் படுத்தாத பாகிஸ்தான்

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: மும்பை தீவிரவாதத் தாக்குதலின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் விடுதலையை பாகிஸ்தான் நியாயப்படுத்தியுள்ளது.

ஹபீஸ் சயீத் விடுதலைக்கு அமெரிக்கா, இந்தியா கண்டனங்களை வெளியிட்டதையடுத்து பாகிஸ்தான் அயலுறவு அலுவலகச் செய்தித் தொடர்பாளர் மொகமத் பைசல், பாகிஸ்தான் அறங்கூற்றுமன்றங்கள் அரசியல் சட்ட கடமையைத்தான் செய்துள்ளன. பாகிஸ்தான் குடிமக்கள் அனைவருக்குமான சட்ட நடைமுறையையே கடைபிடிக்க முடியும். இதில் அரசியல் உலக ஆணைகளுக்கு இடமில்லை.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தானின் உறுதிப்பாடு, வெற்றி, உலகில் எந்த நாட்டுக்கும் ஈடு இணையாகாது, பாகிஸ்தான் எப்போதும் அனைத்து விதமான பயங்கரவாதங்களையும் கடுமையாக கண்டிக்கிறது என்று கூறியுள்ளார்.

ஹபீஸ் சயீத் 297 நாட்களுக்கு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் விடுவிக்கப்பட்டதையடுத்து சர்ச்சை எழுந்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,617

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.