Show all

அன்புச்செழியன் பாதுகாக்கப் படுவது திரையுலகின் தலைவிதியா

09,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் அகவை43 வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தார்.

இவர் சசிகுமார் நடத்திவரும் நிறுவனத்தில் இணை தயாரிப்பாளராகவும் இருந்துவந்தார்.

கடன் தொல்லையால் கடந்த கடந்த செவ்வாய்க் கிழமை கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. கடிதத்தில், தற்கொலைக்கு சினிமா நிதிநிறுவனர் அன்புசெழியனிடம் வாங்கிய கடனே காரணம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் நடிகர் சசிகுமார் தரப்பினர் சரியான ஒத்துழைப்பு தராததால் தலைமறைவான நிதிநிறுவனர் அன்புசெழியனைப் பிடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சசிகுமார் நேரில் அணியமாகி விளக்கம் அளிக்குமாறு காவல்துறையினர் உத்தரவிட்டனர்.

இது தொடர்பாக நடிகர் சசிக்குமார் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் அணியமாகி விளக்கம் அளித்தார். விசாரணைக்கு பின் நடிகர் சசிக்குமார் செய்தியார்களிடம் கூறியதாவது:

உறவினர் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் எனக்கு தெரிந்த தகவலை காவல்துறையினரிடம் கூறியுள்ளேன். அன்புச்செழியன் மீது இன்னும் பலர் புகார் அளிப்பார்கள். அன்புச்செழியனுக்கு ஆதரவாக பலர் கருத்து கூறுவது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

-காங்கிரசுக்குப் பின்னால் திரையுலகினர்தான் தமிழகத்தை ஆண்டு வருகின்றனர். பல கதாநாயகர்கள், கதாநாயகிகள் கோடி கோடியாக சம்பாதித்து திரையுலகிற்கு வெளியேதாம் முதலீடு செய்து சிறப்பாக வாழ்கிறார்கள். அந்தக் காலத் தமிழ் மன்னர்கள் கூட கலைக்கு மிகுந்த மரியாதை அளித்தனர்.

தமிழ் மக்கள் மட்டுந்தாம் கலையை மதித்து கலைஞர்களை ஆட்சி கட்டிலில் அமர்த்தி மகிழ்கிறார்கள். அதையும் கூட அறிவுப் பிழைப்பாளிகள் நையாண்டி செய்து கொண்டுதாம் இருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசுக்கோ, திரையுலகால் வாழுகிற நடிகர், நடிகைகளுக்கோ திரையுலகிற்கு என்று ஒரு வங்கி தொடங்கி திரையுலகை வாழவைக்க துப்பில்லை. காலம் காலமாக திரையுலகம் நிதிநிறுவனர்களை நம்பிதான் பிழைத்துக் கொண்டிருக்கிறது.

எத்துனை வட்டி வாங்கினாலும் எத்தனை பேர் திரையுலகிற்காக பலியானலும் நிதிநிறுவனங்கள் பாதுகாக்கப் பட்டேவரும்.

தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,617

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.