Show all

காவிரி வரும்! கர்நாடகம் முரண்டு பிடித்து கெடுப்பதற்கு, இயற்கை அவர்களுக்கு சாதகமாக அமையாது

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: காவிரி சட்டப் போராட்டம்: தமிழகத்திற்கு கொஞ்சமாக, காவிரி மேலாண்மை வாரியம்- காவிரி ஒழுங்காற்றுக் குழு மூலமாக, நியாயத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. 

அந்த கொஞ்ச நியாயத்தையும், கர்நாடகம் முரண்டு பிடித்து கெடுப்பதற்கு, எவ்வளவு முயன்றாலும் இயற்கை அவர்களுக்கு சாதகமாக அமையாது. 

கர்நாடகம் அத்து மீறி கட்டிய நான்கு அணைகளால் எப்போதுமே காவிரியை தமிழகத்திற்கு வரவிடாமல் தடுக்க முடியாது. தமிழகத்திற்கு ஒரு சொட்டு நீர்கூட தராமல் கெடுத்து விட வேண்டும் என்பதுதான் கருநாடகத்தின் விருப்பம். அதன் பொருட்டே ஆடு தாண்டும் காவிரியிலும் மேலும் ஒரு அணையைக் கட்டிட கர்நாடகம் தொடர்ந்து முயற்சியில் இருக்கிறது. 

இந்திய விடுதலைக்குப் பிறகு கர்நாடகம் கட்டிய அணைகளை; அத்துமீறல்களை அப்புறப் படுத்த வேண்டும் என்கிற அறிவு யாருக்கும் இல்லாமல் போனாலும், அத்து மீறிய அணைகளையும் தாண்டி மழை பெய்வித்து தமிழகத்தைக் காக்கிற கடமையை இயற்கை எடுத்துக் கொண்டிருப்பதால் தான் இன்னும் நாம் காவிரிக்காக போராடும் வாய்ப்பை மீண்டும் மீண்டும்  தக்க வைத்துக் கொள்ள முடிகிறது. தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகத்திற்கு சாதகமான கடமை ஆற்ற முடிவு செய்து விட்டது. 

காவிரி மேலாண்மை வாரியம்- காவிரி ஒழுங்காற்றுக் குழு அறிவித்த நீரை கர்நாடகம் வழங்க வேண்டிய கட்டாயம் உருவாகி விடும். கர்நாடகம் முரண்டு பிடிப்பது போல் நடிக்கலாமேயொழிய தண்ணீரைத் தடுக்க முடியாது. ஆணையம் குறிப்பிடும் நீருக்கு அதிகமாகவே கொடுத்துவிடும். இந்த ஆண்டு நீரை கொடுத்து ஒரு முன்மாதிரியை உருவாக்கி விடுமானால் அப்புறம் பதினைந்து ஆண்டுகளுக்கு ஆணையம் தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற்றுத் தருவதற்கு தடையிருக்காது.

கடந்த பருவமழையைக் காட்டிலும் இந்த ஆண்டு நல்ல மழைப் பொழிவைத் தரும் வகையாக தென்மேற்கு பருவ மழை வழக்கமான தொடக்கத்திற்கு சற்று முன்னதாகவே தொடங்கியிருக்கிறது. எதிர் வரும் மூன்று மாத காலகட்டத்தில் நாடு முழுவதும் 96 முதல் 104 விழுக்காடு மழை பெய்யக் கூடும் என்றே வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,836.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.