Show all

ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இடம் பிடித்தார் ராகுல் டிராவிட்

கிரிக்கெட் விளையாட்டில் சாதனை புரிந்த வீரர் வீராங்கனைகளை கௌரவப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் 'ஹால் ஆஃப் ஃபேம்' விருதுகளை வழங்கி வருகிறது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). அதன் படி இந்த ஆண்டுக்கான ஹால் ஆஃப் ஃபேம் விருதை இந்தியாவின் ராகுல் டிராவிட், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் மற்றும் இங்கிலாந்து மகளிர் அணியின் விக்கெட் கீப்பரும், ஓய்வு பெற்ற வீராங்கனையுமான கிளையர் டெய்லர் ஆகியோர் பெற உள்ளனர். ஹால் ஆஃப் பேம் விருதை பெரும் 5-வது இந்திய வீரர் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்க்கு முன்பு பிஷன் சிங் பேடி(2009), கபில் தேவ்(2009), சுனில் கவாஸ்கர்(2009) மற்றும் அனில் கும்ப்ளே(2015) ஆகியோர் மட்டுமே பெற்றுள்ளனர். 

அதே போல், ஹால் ஆஃப் பேம் பட்டியலில் இடம் பெறும் 25-வது ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் என்பது குறிப்பிடத்தக்கது. 1996-ம் ஆண்டு, சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த டிராவிட், கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். மேலும் தற்போது இந்திய U19 அணிக்கு பயிற்சியாளராக உள்ளார். டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,288 ரன்களையும், 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, 10,889 ரன்களையும் குவித்துள்ளார். ராகுல் டிராவிட் இந்திய அணியின் `சுவர்' என்று வர்ணிக்கப்படுபவர் என்பது அனைவரும் அறிந்ததே.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.