Show all

மக்கள் மீது போராட்ட சுமை! பெரியபாளையம் ஏரியில் மணல் அள்ள பொதுமக்கள் தடை

18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெரியபாளையம் அருகே உள்ளது கன்னிகைபோர் ஏரி. இந்த ஏரியில் சவுடி மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

இதனால் கிராம மக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் இறங்கியது. இதற்காக பேச்சுவார்த்தையும் நடத்தியது. ஆனாலும் கிராம மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் அந்த ஏரியில் மணல் அள்ள 50-க்கும் மேற்பட்ட லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. இப்படி மொத்தமாக லாரிகள் வருவதை கண்ட கிராம மக்கள் ஒன்றாக திரண்டனர். ஏரியில் ஒன்றுசேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் ஏரியை நோக்கி வந்துகொண்டிருந்த லாரிகளை சிறைபிடித்தனர். மேலும் மணல் அள்ளுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் முழக்கங்களையும் எழுப்பினர்.

தகவலறிந்து வந்த காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மணல்குவாரியை எதிர்த்தும், மணல் அள்ளக்கூடாது என்பது குறித்தும் மனு எழுதி மாவட்ட ஆட்சியரிடம் தருமாறு அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

ஒரு பக்கம் ரஜினி, சக்கி வாசுதேவ் போன்றோர் போராட்டம், போராட்டம் என்று தமிழகம் வீணாய் போய்க் கொண்டிருப்பதாக நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசோ! ஆய்வுகளோ, பொதுமக்களிடம் கருத்து கேட்புகளோ இன்றி, யாருக்கு வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் அனுமதி கொடுத்துக் கொண்டிருக்கிறது. மக்கள் என்னதான் செய்வார்கள் பாவம்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,836.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.