Show all

சென்னையில் கலக்கத்தில் பிரியாணி கடைகள்! நாய்க்கறி சர்ச்சைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த கிழமை ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த தொடர்வண்டியில் கொண்டு வரப்பட்ட சிப்பத்தில், 2000 கிலோ கறிகள் அழுகிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. இவை நாய்கறி என்று தொடர் வண்டிக் காவல்துறையால் கூறப்பட்ட தகவலை நம்பி ஊடகங்கள் பரபரப்பைக் கிளப்பின. 

தொடர்வண்டித்துறை அதிகாரிகளுக்கு சென்று சேர வேண்டிய இலஞ்சம் முறையாக சென்று சேரமை காரணமாகவே, அழுகிய கறியை நாய்க்கறியாக்கி விட்டதாக ஒரு குற்றச்சாட்டு கிளப்பப் பட்டிருக்கிறது. இப்போது வரை இது நாய்கறிதான் என்று யாரும் உறுதியாக விளக்கமளிக்கவில்லை. ஆனால் இது மக்கள் மத்தியில் பெரிய பீதியை கிளப்பி உள்ளது. 

இதனால் சென்னையில் கறி விற்பனை பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆடு, மாடு இரண்டின் விற்பனையும் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. அதேபோல் பிரியாணி கடைகளிலும் பெரிய அளவில் விற்பனை நடக்கவில்லை. ஞாயிற்றுக் கிழமையில் கூட பெரிய அளவில் விற்பனை நடக்கவில்லை. சென்னையில் உள்ள பிரபல பிரியாணி கடைகள் கூட இதனால் பெரிய அளவில் இழப்பை சந்தித்து இருக்கிறது. 

உறுதி படுத்தாமல் உலவும் தகவல் காரணமாக சிறிய பிரியாணி கடைக்காரர்கள், எளிய மக்களின் வருகையை நம்பி இருக்கும் கடைக்காரர்கள் பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறார்கள். இது விற்பனையாளர்களுக்கு பெரிய கலக்கத்தை கொடுத்துள்ளது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,977.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.