Show all

திக், திக், திக் பதட்டத்தில் சபரிமலை! தொண்டர்களுடன், சந்நிதானத்தை நோக்கி முன்னேறும் பெண் தலைவர் சசிகலா

04,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை கோயிலில் மகரவிளக்கு காலத்துக்காக மீண்டும் நடை திறக்கப்பட்டுள்ளது. உச்ச அறங்கூற்றுமன்றம் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க உத்தரவிட்டதையடுத்து, பெண் சமூக செயற்பாட்டாளர்கள் சபரிமலை செல்ல முயன்றுவருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் திரிப்தி தேசாய், சபரிமலை செல்ல கொச்சி வந்தார். விமான நிலையத்தில் நடந்த, ஹிந்து ஆணாதிக்கவாதிகள் முற்றுகை காரணமாக, அவரால் சபரிமலை செல்ல முடியவில்லை. மீண்டும் சபரிமலை செல்வதற்கு கேரளா வருவேன் என்று கூறிவிட்டு திரிப்தி தேசாய் தற்போது புனே திரும்பியுள்ளார்.

கேரள ஹிந்து ஐக்கிய வேதி என்ற அமைப்பின் தலைவர் சசிகலா, சபரிமலை செல்ல முயன்றார். சனிக்கிழமை திருவல்லாவில் அவரைக் கைதுசெய்த காவல்துறையினர், அறங்கூற்றுமன்றத்தில் அணியப் படுத்தினர். ரன்னி காவல் நிலையத்தில் அவர் காவலில் வைக்கப்பட்டார். தன்னை சபரிமலைக்குள் அனுமதிக்க வேண்டுமென்று கூறி காவல் நிலையத்தில் அவர் உண்ணாநிலை இருந்தார்.

சசிகலா காவல் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டதை அறிந்த அவரின் ஆதரவாளர்கள் 2000-க்கும் மேற்பட்டவர்கள், ரன்னி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சசிகலாவை ஐயப்பனைத்  தரிசனம் செய்யவைக்க வேண்டும். அவரைக் கைதுசெய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட சசிகலா, இன்று காலை சபரிமலை சந்நிதானத்தை நோக்கி நடக்கத் தொடங்கியுள்ளார். சசிகலா கையில் தன் பேரக் குழந்தையை வைத்துள்ளார். ஆதரவாளர்களும் அவருடன் செல்கின்றனர். சசிகலா சந்நிதானத்தை நெருங்குகையில் என்ன நடக்குமோ என்கிற பதட்டம்  நிலவுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,977.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.