Show all

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் புது வசந்தம் என்னும் சேவை அறிமுகம்

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், தனது இணைய சேவையை அக்டோபர் 1-ம் தேதி முதல் 4 மடங்கு அதிகமாக்கவுள்ளது.

இது தொடர்பாக பிஎஸ்என்எல் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது நொடிக்கு 512கேபிபிஎஸ் வேகத்தில் இணையச் சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில், பிரதமரின் டிஜிட்டல் இந்தியா சேவையின் அடிப்படையில் தற்போதைய இணையச் சேவையின் வேகத்தை 4 மடங்கு அதிகமாக்கப்படவுள்ளது. அதன்படி, பிஎஸ்என்எல் இணையச் சேவை 2 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிஎஸ்என்எல் நிறுவனம் புது வசந்தம் என்னும் சேவையை அறிமுகப்படுத்துகிறது.

இந்த சேவையின்படி, பிஎஸ்என்எல் ப்ரீ-பெய்டு லைஃப் டைம் சிம் கார்டினை ரூ.15 க்கு வாங்கிக் கொள்ளலாம். இந்த சிம் கார்டின் மூலம் 1000 நிமிடங்களுக்கு அழைப்புகளை இலவசமாக பேசிக் கொள்ளலாம். அதற்கான காலக்கெடு 3 மாதங்கள் ஆகும். மேலும், சிம் வாங்கிய முதல் 3 மாதத்துக்கு 0.8 பைசா மட்டுமே அழைப்புக்கான கட்டணமாக வசூலிக்கப்படும்.

சிம் வாங்கியதும், மாதம் ஒன்றுக்கு 25 இலவச எஸ்எம்எஸ் என முதல் 3 மாதங்களுக்கு அனுப்பிக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி, 50 எம்பி இணையச் சேவையை முதல் மாதம் இலவசமாக வழங்கப் படும்.

உங்கள் பகுதியில் டவர் இருப்பதை உறுதி செய்து கொண்டு முயலலாம்.


மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.