Show all

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ரூ.35 ஆயிரம் கோடியில் கடற் மேம்பாலம் வழியாக சாலை!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ரூ.35 ஆயிரம் கோடியில் கடற் மேம்பாலம் வழியாக சாலை அமைப்பது தொடர்பாக ரணிலுடன் நிதின் கட்கரி பேச்சு வார்த்தை நடத்தினார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசிய அவர் 4 முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இரு நாட்டு மீனவர் விவகாரம், இலங்கை தமிழர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து இருநாட்டு பிரதமர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் ஒன்றாக பேட்டியும் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து ரணிலுடன் மத்திய நெடுஞ்சாலைகள் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையின் போது இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி, இலங்கையில் உள்ள தலைமன்னார் ஆகியவற்றிற்கு இடையே சுமார் ரூ.35 ஆயிரம் கோடி மதிப்பில் கடற்பாலம் அமைப்பது தொடர்பாக இருவரும் பேசினர்.தனுஷ்கோடி தலை மன்னார் இடையிலான 23 கிமீ தொலைவிலான இந்த திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிறுவனங்களின் ஆதரவை கோருவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. சார்க் நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த சாலை பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.