Show all

கொந்தளித்த மக்கள்! கிராமச்சாலை மூடப்பட்டு, குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் மக்கள் அகதிகளாக்கப்படும் அவலம்

தஞ்சாவூர் அருகே மாற்று கிராமம் உருவாக்கித் தருவதாகக் கூறி, இனத்துக்கான்பட்டி மக்களிடம் நிலங்களைக் கையகப்படுத்தியுள்ளது இந்திய விமானப்படை. தற்போது, அந்தப் பகுதி முழுவதும் விமானப்படை கட்டுப்பாட்டில் இருப்பதுடன், மக்கள் வெளியே செல்வதற்குப் பயன்படுத்திவந்த சாலையை மூடி, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அந்த வழியாகச் செல்வதற்கு அனுமதிக்கின்றனர் அதிகாரிகள். இதனால், சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழும் சூழ்நிலையில் இருக்கிறோம். உடனடியாக நடவடிக்கை எடுத்து, எங்களை நிம்மதியாக வாழ வழி ஏற்படுத்துங்கள் என தமிழக அரசுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்துவருகின்றனர் இனத்துக்கான்பட்டி மக்கள்.

03,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ளது, இந்திய விமானப்படை தளம். இங்கு, பல ஆண்டுகளாகவே பல்வேறு விரிவாக்கப் பணிகளைச் செய்துவருகின்றனர், விமானப்படை தளத்தைச் சேர்ந்த அதிகாரிகள். இதற்காக, விமானப்படை தளம் அமைந்துள்ள இடத்தைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதேபோல் இனத்துக்கான்பட்டி கிராமத்திலும் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த ஊர், இந்திய விமானப்படை தளத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருப்பதுடன் ஊரைச் சேர்ந்த மக்கள் வெளியே சென்று வருவதற்கு விமானப்படைக்கு சொந்தமான ஒரு சாலையை மட்டும் பயன்படுத்திவந்தனர்.

தற்போது அந்தச் சாலை மூடப்பட்டு, குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் மக்கள் யாரும் வெளியே செல்லவும், உள்ளே வரவும் அனுமதிப்பதில்லை. இதனால் நாங்கள் அகதிகளாக வாழ்கிறோம். எங்க பகுதியில் மட்டும் ராணுவ ஆட்சி நடக்கிறதா என்ற கேள்வியுடன் எங்களை வாழவிடுங்கள். இல்லையென்றால், சாவதற்கு சுடுகாடு கொடுங்கள் என்ற முழக்கத்துடன், நேற்று தஞ்சாவூர் ஆட்சியர் அண்ணாதுரையிடம் மனு கொடுக்க வந்தனர். மேலும், எங்களுக்கு மாற்று கிராமம் அமைக்கும் வரை குறிப்பிட்ட அந்த சாலையில் எப்போதும்போல் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், இனத்துக்கான்பட்டி ஊரைச் சேர்ந்தவர்கள், விமானப்படைக்குள் இருக்கும் சாலையைப் பயன்படுத்தி வந்திருந்தனர். வேலைக்குச் செல்வது, பிள்ளைகள் பள்ளிக்குப் போவது உட்பட, வெளியே செல்ல வேண்டும் என்றால், குறிப்பிட்ட சாலை வழியாகத்தான் சென்று வரவேண்டியிருந்தது. மாற்று கிராமம் உருவாக்கும் வரை இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்தச் சாலையை மூடிவிட்டதுடன், காலை 7 மணி முதல் 9 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணிவரையும் மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு, இனத்துக்கான்பட்டி ஊரைச் சேர்ந்த ஒருவருக்கு உடம்பு சரியில்லை. சடுதிவண்டி வந்து விட்டது. ஆனால், மூன்று மணி நேரத்திற்குப் பிறகுதான் உள்ளே வர அனுமதித்தனர். நல்லது கெட்டதுக்கு கலந்துகொள்ள வருகிற உறவினர்களையும் அனுமதிப்பதில்லை. 

இந்தக் குறைகளை ஆட்சியரிடம் சொல்வதற்கு சந்திக்க வந்தாலும் சந்திக்க முடியவில்லை. தமிழக அரசு, எங்களை சொந்த நிலத்தில் அடிமைகளாக, அகதிகளாக வாழ வைத்துள்ளது. எங்க நிலைமை யாருக்கும் வரக்கூடாது. உடனே இதற்கான மாற்றை ஏற்படுத்தி, எங்களை நிம்மதியாக வாழவிடுங்கள் என கெஞ்சி கேட்கிறோம் என கலங்கியபடி கூறினார் இனத்துக்கான்பட்டி பொது மக்கள்.

எங்க பகுதியில் மட்டும் ராணுவ ஆட்சி நடக்கிறதா என்ற கேள்வியுடன் எங்களை வாழவிடுங்கள். இல்லையென்றால், சாவதற்கு சுடுகாடு கொடுங்கள் என்ற முழக்கத்துடன், நேற்று தஞ்சாவூர் ஆட்சியர் அண்ணாதுரையிடம் மனு கொடுக்க வந்தனர் அப்பகுதி மக்கள். மேலும், எங்களுக்கு மாற்று கிராமம் அமைக்கும் வரை குறிப்பிட்ட அந்த சாலையில் எப்போதும்போல் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,250.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.