Show all

அற்புதம்மாள்! பெயருக்கு ஏற்றபடியே தனது மகனின் விடுதலைக்காக அற்புதமாகப் போராடும் வரலாற்றுத்தாய் அற்புதம்மாள்

20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்துவரும் 7 தமிழர்களை விடுவிக்க, பல்வேறு இடங்களுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து, ஆதரவுகளைத் திரட்டியும் ஆலோசனை பெற்றும் வருகிறார், பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்.  

இந்நிலையில் மதுரை ராமுசுப்பு அரங்கில் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பாகச் செய்தியாளர்களிடம் பேசுகையில், என் மகன் உள்ளிட்ட ஏழு தமிழர்கள், சிறை சென்று 28 ஆண்டுகளான நிலையில் விடுதலை செய்யப்படவில்லை. இது தாங்க முடியாத வேதனை,

விடுதலை செய்யலாம் என சட்டம் நிறைவேற்றப்பட்டு 140 நாட்களாகியும் ஆளுநர் தாமதிக்கிறார், நியாயமான கோரிக்கை புறம் தள்ளப்படுவதால் மக்களைச் சந்திக்க வந்துள்ளேன். கிடைத்த நியாயத்தைப் பெற முடியாத சூழலில் உள்ளோம். என் மகனுக்காக சிறை செல்வோம் என சில மக்கள் கூறினர். ஆனால், ஒரு தாயாக யாரும் சிறை செல்வதை விரும்பாத காரணத்தால் என் மகனுக்காக யாரும் சிறை செல்ல வேண்டாம் என வலியுறுத்தினேன்.

முன்னாள் முதல்வர் செயலலிதா என் மகனை விடுவிப்போம் என எனக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால், ஆளுநரின் தாமதம் காரணமாக இன்னும் விடுதலை ஆகவில்லை என்பதே உண்மை. ஒட்டு மொத்த தமிழக மக்களும் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மக்கள் சந்திப்பில் மக்களின் கருத்துகள்படி இறுதி முடிவு எடுப்போம் என்றார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,051.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.