Show all

பாவம்! போராளி கௌசல்யாவை அடுத்த போர்களம் எதிர் கொள்கிறது

20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் எழுத்தர் பணியில் இருந்து உடுமலை கௌசல்யா தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட சங்கர், கௌசல்யா இணையர் மீது கௌசல்யாவின் உறவினர்கள் தாக்குதல் நட்தினர் இதில் சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். கௌசல்யா படுகாயங்களுடன் மீட்கப்பட்டார். இந்த நிலையில் ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கௌசல்யா குரல் கொடுத்து வந்தார். இந்தக் கருத்துப் பரப்புதல் தளத்தில், நிமிர்வு கலையகத்தின் பொறுப்பாளர் சக்தியுடன் நட்பு ஏற்பட்டு, சக்தியை மறுமணம் செய்துகொண்டார். 

இந்த திருமணத்திற்கு சங்கரின் குடும்பத்தார் கௌசல்யாவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கூறி கௌசல்யா குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் எழுத்தர் பணியில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது கௌசல்யா சரணடைந்திருக்கிற கருத்தியல் தளம் அவரை எப்படி இயல்பு நிலைக்கு மீட்டெடுக்கும் என்ற ஏக்கம் நம்முள் குடியேறியிருக்கிறது.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,051. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.