Show all

செயலலிதா மறைவுக்கு திமுகவே காரணம்! கூட்டுறவுத்துறை அமைச்சர்

20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா மறைவிற்கு விசாரணை நடத்தப்படும் என, ஸ்டாலின் கூறுகிறார் என்றால், அவருக்கு என்ன அருகதை உள்ளது. செயலலிதா மறைவிற்கு காரணம், திமுக தான். 
    கர்நாடகாவில் நடந்த சொத்து குவிப்பு வழக்கில், நிரபராதி என நிரூபிக்கப்பட்ட பின், உச்ச அறங்கூற்றுமன்றத்துக்கு வழக்கை கொண்டு சென்று, செயலலிதாவை மன உளைச்சலுக்கு ஆளாக்கி, அவர் மறைவிற்கு காரணமாக இருந்தது, திமுக தான். இவ்வாறு கூட்டுறவுத்துறை அமைச்சர், ராஜு கூறினார்.
    உண்மைதான்! தமிழகத்தில் அதிகாரம் இல்லாத இந்த அரசாட்சிப் பதவிக்கு திமுகவும் அதிமுகவும் அடித்துக் கொள்வதும், காங்கிரசையும், பாஜகவையும் ஒன்றுக்கொன்று நாட்டாமைக்கு அழைப்பதும் தமிழகத்திற்கு பேரிழப்பு தாம். தமிழகத்தின் உரிமைகள், அதிகாரங்களை  நடுவண் காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்துதாம் திமுகவும், அதிமுகவும் ஒன்றுக் கொன்று பலி வாங்கிக் கொண்டிருந்தன. செயலலிதா மறைவிற்கு திமுக காரணம் போல சேலம் வீரபாண்டி ஆறுமுகம் மறைவிற்கும். அ.இராச, கனிமொழி அனுபவித்த கொடுமைகளுக்கும் காரணம் அதிமுகதான்.
    -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,051.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.