Show all

தமிழர்களுக்கு இந்த மூன்றும் இல்லையா! 1.சந்தைப்பொருள் 2.சந்தை 3.கருத்துப் பரப்புதல்

12,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோல்! இது மட்டுமே வளமான முன்னேற்றத்திற்குப் போதுமானதாக இருக்கிறது; 

அராபிய நாடுகளுக்கு.

இந்த அட்சயப் பாத்திரம் இயற்கையின் கொடையாக அவர்களுக்கு கிடைத்து விட்டது.

தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுகவென, 

நிருவாக மற்றும் உடலுழைப்பு கூலிகளுக்கு நல்ல சம்பளம் கொடுக்கும் நாடுகளாக உலக உழைப்பாளிகளுக்கு பச்சைக் கம்பளம் விரிக்கின்றன இந்த நாடுகள்.

அரபிய நாடுகளின் சந்தைப்பொருள்: பெட்ரோல்

சந்தை: உலக மக்கள்

கருத்துப்பரப்புதல்: எரிபெருள் என்பதால் தேவை எழவில்லை.

ஆக-

வளமான முன்னேற்றத்திற்கு!

ஒற்றைச் சந்தைப்பொருள்,

சந்தை,

கருத்துப்பரப்புதல் ஆகியன போதுமானது.

இன்றைக்கு, 

இந்தியாவை முன்னெடுத்துச் செல்லுகிறவர்களாகவும் உலகம் முழுவதிலும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியவர்களாகவும் இருப்பவர்கள்- ஆரியர்கள்.

நேற்று உலகம் முழுமையும் கட்டி யாண்டவர்கள்- ஆங்கிலேயர்கள்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் ஒட்டு மொத்த உலகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தவர்கள்- தமிழர்கள்.

இன்றைக்கு தமிழர்களுக்கான இடம்? 

இடத்தை அடைவதற்கான தேவைப்பாடான முயற்சி குறித்துச் சிந்திப்பதற்கான முன்னோட்டம் இது.

நேற்று; 

ஆங்கிலேயர், 

மற்றும் தமிழர் சந்தைப்பொருள் என்னவாக இருந்தன? 

இன்றைக்கும் ஆரியர் சந்தைப் பொருள் என்னவாக இருக்கிறது?

ஆங்கிலேயர் சந்தைப்பொருள்: ஆட்சி, அதிகாரம் இவை மட்டுமே.

வணிகர் என்ற போர்வையில் ஆட்சி அதிகாரத்தை மட்டுமே சந்தைப் படுத்தினார்கள்.

இந்தியாவிற்கு அவர்கள் விடுதலை கொடுத்து விட்டுச் சென்றாலும்,

நாம் நம் மக்களுக்கான சட்டம் அதிகாரங்களை அமைத்துக் கொள்ளவேயில்லை. ஆங்கிலேயர் சட்ட அதிகாரங்களுக்கும் அவைகளைப் பதிந்து வைத்திருக்கிற ஆங்கில மொழிக்கும் நாம் நுகர்வோர்களாகவே இருந்து கொண்டிருக்கிறோம்.

அவர்கள் விடுதலை கொடுத்துவிட்டுச் சென்ற பெரும்பாலான நாடுகளின் நிலையும் இதுதாம்.

நான்கு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களிடம் பல உற்பத்திகள், பற்பல திறன்கள், கடலோடல்; உள்ளிட்ட பல்வேறு தொழில் நுட்பங்கள் இருந்த போதும்-

(தமிழக வரலாற்றில் கடல்வழிப் போக்குவரத்தும், வணிக துறைமுகங்களும் புகழ் பெற்றவைகளாக இருந்துள்ளன. கொற்கை, பழைய காயல், தொண்டி, காவிரிபூம்பட்டினம், முசிறி, உவரி, மாமல்லபுரம் போன்ற இடங்களில் முற்காலத்தில் துறைமுகங்கள், வணிக தளங்களாக அமைந்திருந்தன. இத்துறைமுகங்கள் நான்கு ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன. கொற்கை முத்தின் சிறப்பை அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. டாக்டர் கால்டுவெல்லும் பழைய காயல், கொற்கை பெருமைகளைப் பாராட்டியுள்ளார். மார்கோ போலோவும் தன்னுடைய குறிப்பில், இந்த நகர அமைப்புகள், மாட மாளிகைகள் தன்னை கவர்ந்ததாக கூறியுள்ளார். உலக அழகி கிளியோபாட்ரா கொற்கை முத்துக்கு அடிமையானதாகவும் எகிப்து பொருளாதாரம் தமிழர்களால் சுரண்டப்படுவதாகவும் எகிப்து நாட்டு அறிஞன் பிளினி சாடுகிறான். வங்கக் கடலில் தமிழர்களின் வாழ்வியல் கோட்பாடுகளும், ஆளுமையும் கொடிக் கட்டிப் பறந்தது. கொற்கை, பழைய காயலில் முத்து எடுக்கும் பாங்கினை நற்றினையும், ஐங்குறுநூறும் சொல்கின்றது. மணப்பாடு, உவரி பற்றியும் இலக்கியத்தில் ஆதாரங்கள் உள்ளன. காவிரிப் பூம்பட்டினத்தைப் பற்றி சிலப்பதிகாரம், மணிமேகலை, மார்கோ போலோவின் எழுத்துக்கள் வர்ணிக்கின்றன.)

கொற்கை முத்து மற்றும் சேர நாட்டு மிளகு, ஏலம், கிராம்பு, இலவங்கம், இஞ்சி, மெல்லியத் துணிகள், அரிசி, வைரம், யானைத் தந்தம், பழங்கள் போன்ற உற்பத்திப் பொருள்களே தமிழர்தம் சந்தைப் பொருட்களாக இருந்தன. 

ஆனால் ஆரியர்களின் சந்தைப்பொருள்:

அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும்-

இராமாயனம், மகாபாரதம் மட்டுமே.

தமிழர்கள் ஆரியர்களிடம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இழந்த-

இலக்கியங்கள், வானியல் நிமித்தக அகத்தியல் மருத்துவ நுட்பங்கள், கோயில்கள், இறையிலி நிலங்கள், தேவர்அடியார்களாக ஏழைத் தமிழ்ப்பெண்களின் மானம், தாழ்ந்த சாதியினராக நாம் இழந்த நிலம், தொழில், வணிக, ஆட்சி உடைமைகள் ஆகிய அனைத்திற்கும் நாம் பெற்ற நுகர்வு இராமாயனம், மகாபாரதம் மட்டுமே.

இன்றைக்கும் சன் போன்ற தொலைக்காட்சி வழியாக  நேரடியாக இராமயனமாகவும் மகாபாரதமாகவும் துணைக்கதைகளாக அனுமன் நாகினி ராதாகிருஷ்ணா அதேகண்கள் அகியவற்றுக்கெல்லாம் நாம் சந்தையாக இருந்து கொண்டுதானே இருக்கிறோம். 

இன்றைக்கும் தமிழர்கள்-

ஆரிய அராபிய மார்க்சிய ஐரோப்பிய மத அயல் உடைமையாளர்களிடம், உடல் உழைப்பு கூலியாகவோ நிருவாகக் கூலியாகவோ மட்டுந்தாம் இயங்கியாக வேண்டுமா?

தமிழர்களிடம் சந்தைப் படுத்துவதற்கு எந்த உற்பத்தியும் இல்லையா?

இருக்கிறது! இருக்கிறது! 

திருக்குறள் போதும்.

சிலம்பம் போதும்.

சித்த மருத்துவம் போதும்.

ஓகக்கலை போதும்.

எட்டுத்தொகை நூல்கள் போதும்

சிற்பக்கலை போதும்

தமிழ்மந்திரம் போதும்.

தமிழிசை போதும்

கடலோடும் திறன் போதும்

இயற்;கை வேளாண் தொழில் போதும்

நம்மிலிருந்து கூட நிறைய திறன்களைக் கட்டுமானம் செய்யலாம்.

நமக்கான இடத்தைக் கைப்பற்றுவோம்!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,043.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.