Show all

முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் சாதிக்கப் பட்டது ஏதாவது உண்டா! சென்னை உயர் அறங்கூற்று மன்றம் கேள்வி

12,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. 

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் புதன்கிழமை தொடங்கியது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.

இதில் நடுவண் பாஜக அரசின் ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை தொழில் கொள்கை 2019 என்ற விளக்க கையேட்டை வெளியிட்டு பேசினார். முதலீட்டாளர்கள், தேசிய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், கூட்டமைப்புகள் மற்றும் தூதரகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் என சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சென்னை உயர்அறங்கூற்று மன்றத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விதிமுறைகள் வகுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. 

முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது?  முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டன?  மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன?  முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தங்கள் எத்தனை? இவ்வாறு அறங்கூற்றுவர்கள் கேள்வியெழுப்பினர். 

மேலும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு விதிமுறைகள் வகுக்க கோரிய மனுவையும் தள்ளுபடி செய்ததுடன், முதல் உலக முதலீட்டாளர் மாநாடு தொடர்பாக தமிழக அரசு அறிக்கை பதிகை செய்யவும் அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர்.  

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்: 18,70,043.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.