Show all

ஒரு வரலாற்றுப் பார்வை! வீட்டிலேயே பிரசவம் பார்க்க இலவச பயிற்சி என்று விளம்பரம் செய்த நிஷ்டை அமைப்பின் நிறுவனர் கைது

17,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பிராண சிகிச்சை என்ற தலைப்பில் கிராமத்தில் பாடம் போடுவதற்கு இணையான சிகிச்சை முறை ஒன்று நீண்ட நெடுங்காலமாக இந்தியா முழுவதும் புழக்கத்தில் இருந்து வருகிறது. 

பாடம் போடுவது எப்படி உளவியல் சிகிச்சை முறையோ அப்படி இது ஒரு உளவியல் சிகிச்சை முறையாகும். பழந்தமிழகத்தில் இது ஒரு கலையாக இருந்திருக்கிறது என்று நம்பப் பட்டாலும் யாரும் பாரம்பரியமாக இந்தக் கலையை அறிந்தவர்கள்; தற்போது இல்லை. 

வேதாத்திரி, சக்கிவாசுதேவ், பாபாதேவ், ரவிசங்கர் இப்படி நூற்றுக் கணக்கானவர்கள் யோகா, தியானம், உயிராற்றல், பிராணசிகிச்சை, தூரத்து சிகிச்சை, பிரபஞ்ச பிராண சக்தி ஆன்மீகம், மனவளக் கலை, ரெய்கி, ஹீலிங் என்று ஒரே அடிப்படையில் இயங்கி வருகிறார்கள். கோடிக்கணக்கானவர்கள் அவர்களுக்கு அனுதாபிகளாகவும் இருக்கிறார்கள்.

டாக்டர் ஜான் ஏ. ஆஸ்டின் என்ற அமெரிக்க மருத்துவர் யூனிவர்சிட்டி ஆப் மேரிலாண்ட் ஸ்கூல் ஆப் மெடிசனில் உதவி பேராசிரியர் இந்த முறைகளை ஆய்வு செய்து, 'பொதுவான உண்மை ஒன்று உள்ளது. பிராண சிகிச்சை அனைத்தையும் குணப்படுத்தும்' என்று புத்தகமும் எழுதியுள்ளார். தூரத்து சிகிச்சை என்பது பிரபஞ்ச பிராண சக்திதான் என்கிறார்.

பிராண சிகிச்சை செய்யும்போது, நோயாளி ஓய்வான மனநிலையில் படுக்கையில் படுத்திருக்கலாம் அல்லது உட்கார்ந்திருக்கலாம். சிகிச்சை நேரம் பத்து முதல் இருபது நிமிடங்கள் வரை இருக்க வேண்டும். சிகிச்சையைப் பெறும் நோயாளி அந்த நேரத்தில் அமைதியாக இருப்பதே மிகவும் முதன்மை.

ஆங்கில மருத்துவமோ அல்லது வேறு மருத்துவமோ செய்து கொள்பவர்கள் இந்தத் தூரத்துச் சிகிச்சையை மேற்கொள்ளும்போது தூரத்து சிகிச்சை மற்றும் மருந்துகள் இணைவதால் குணமளிப்பது எளிதாகிவிடுகிறது.

சில ஆங்கில மருத்துவர்கள், அறிவியல் ரீதியாக நிரூபிக்காமல், சக்திமிக்க மருத்துவம் இது என்று நீங்கள் சொல்வதை எங்களால் ஏற்றக் கொள்ள முடியாது என்று டாக்டர் ஆஸ்டினை அவமதித்து எதிர்ப்பும் தெரிவித்தார்கள்.

ஆனால், அமெரிக்க மக்கள் தொகையில் நான்கு விழுக்காடு பேர்கள் இந்த தூரத்துச் சிகிச்சையை செய்து நன்கு குணம் பெற்றுள்ளனர். இப்போது இந்த விழுக்காடு உயர்ந்து வருகிறது.

பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு 2,774 நோயாளிகளை 23 விதமான ஆய்வுகள் மூலம் மீண்டும் ஆராய்ந்தபோது பிராண சிகிச்சை, தூரத்தில் இருந்து குணப்படுத்துவது முதலியன அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகபட்ச பலன்களைத் தந்துள்ளது. டாக்டர்களின் எதிர்ப்பால் ஆழ்ந்து செல்லாமல் ஆய்வு செய்தபோதே இந்தச் சிகிச்சையின் நன்மைகள் பிரமிக்கத்தக்கதாக இருப்பது ஆச்சரியம்தான் என்கிறார் டாக்டர் ஆஸ்டின். உடல் நோய்களுடன் மனக்கவலைகளும் உறுதியாய் குணமாகிவிடுகின்றனவாம், இந்த தூரத்துச் சிகிச்சையில்!

ராஜபாளையத்தில் இருந்து கொண்டு அமெரிக்காவில் உள்ள உங்கள் மாமியார் குணமாக இருபது நிமிடங்கள் ஹீலிங் செய்யுங்கள். உங்கள் மூளை அனுப்பும் அதிர்வுகள் விண்வெளியில் பயணிக்கும். மாமியாருடைய உடல் நம்முடைய அதிர்வுகளைக் கிரகிக்கும். முடிவில் அது மாமியாரின் உடல் உள்ளே வரை உடனே சென்றடைந்து விடும். நம்முடைய அதிர்வுகள் எங்கும் நிறைந்துள்ள உயிர்ச்சக்தியை அனுப்புவதால், அது நோயாளி உடலில் இறங்கி குணப்படுத்தி விடுகிறது. ராஜபாளையத்தில் ஹீலிங் செய்பவர், தன் பிராணசக்தி தன் மாமியாருக்குச் சென்றடைவதை பாவனையில் காட்சியாகப் பார்ப்பது தான் தூரத்து சிகிச்சையில் மிகவும் முதன்மை.  'ரெய்கி' மருத்துவர்கள் தூரத்துச் சிகிச்சை முறையில் தங்கள் அருகில் இல்லாத நோயாளிகளையும் எளிதாகக் குணப்படுத்திவிடுவது இதனால் தான்.

தூரத்துச் சிகிச்சையில் மற்றவர்களுக்காக ஹீலிங் செய்யும் போது, நோயாளியின் உடலில் இண்டர்லெகின்ஸ் என்ற பொருள் சுரந்து, இரத்தத்தில் கலப்பதால் உடலில் உள்ள நோய்களும், தொற்றுநோய்க் கிருமிகளும் கட்டுப்பட்டு ஆரோக்கியத்தைத் திரும்பப் பெற்று விடுவார்.

இந்த மாதிரியான நம்பிக்கையை விதைத்து ஒரு சார்பு மக்களை தன் வசம் ஈர்த்து வைத்துள்ள ஒரு அமைப்பு தான் இந்த நிஷ்டை அமைப்பும். 

வீட்டிலேயே பிரசவம் பார்க்க இலவச பயிற்சி என்று விளம்பரம் செய்த நிஷ்டை அமைப்பின் நிறுவனர் ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூரில் வீட்டிலேயே சுகப்பிரசவத்திற்கு முயற்சித்த போது, கிருத்திகா என்ற பெண் உயிரிழந்த நிலையில், சுகப்பிரசவத்திற்கு எளிய வழி என விளம்பரம் செய்த புகாரில் கைது செய்யப்பட்டார்.

வீட்டிலேயே இனிய பிரசவம் செய்ய பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்த கோவையைச் சேர்ந்த நிஷ்டை என்ற இந்த மையத்தின் தலைவரான ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டார். இனிய சுகப் பிரசவம் ஒரு வரம் என்ற பெயரில் மருத்துவமனைக்கு செல்லாமல் பேறுகாலம் பார்க்க பயிற்சியளிப்பதாக வெளியான விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. இதுதொடர்பாக கோவை புதூரில் உள்ள நிஷ்டை மையத்தில் பயிற்சி முகாம் நடப்பதாக அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. 

கோவையில் வீட்டில் பிரசவம் பார்ப்பதற்காக நடத்தப்படவிருந்த இந்த இலவச பயிற்சி முகாமை ரத்து செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் தற்போது ஹீலர் பாஸ்கரை கோவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மோசடி மற்றும் ஏமாற்ற முயற்சித்தல் ஆகிய இரு பிரிவுகளின் கீழ் ஹீலர் பாஸ்கரை கோவை குனியமுத்தூர் காவலர்கள் கைது செய்துள்ளனர். 

இந்தக் கலைகள் முறைப்படுத்தப் படாமல் கோடிக்கணக்கானவர்கள் நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பிரசவம் என்பது அலோபதி மருத்துவத்தின் மிக பெரிய வருமான அமுதசுரபி என்கிற நிலையில் இது போன்றவர்கள் தகுந்த ஆதரங்களைக் காட்டி உரிய அங்கிகாரத்தை பெறாமல் பிரசவம் போன்ற விசயங்களில் அடக்கி வாசிக்க வேண்டும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,867.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.