Show all

இரா.கி.நகர் தேர்தல் ஐயப்பாட்டிற்கு இடமின்றி நிகழ நல்லதொரு வாய்ப்பு! நழுவிப்போகமல் அமையுமா

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரா.கி.நகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் 72 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. இதனால் இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்துவதில் சிக்கல் வரக் கூடும் என்கிற நல்லசேதி கிடைத்திருக்கிறது.

இன்று வேட்புமனுக்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தால் சரி பார்க்கப்பட்டது. இதில் 72 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. செயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் மனு நிராகரிக்கப்பட்டது. நடிகர் விஷாலின் வேட்பு மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது பரிசீலனைக்குப் பிறகு அவரது வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி 72 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

பொதுவாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒரு பெட்டியில் 16 வேட்பாளரின் சின்னத்தை மட்டுமே பொருத்த முடியும். இதே போன்று அதிகபட்சமாக ஒரு வாக்குச் சாவடிக்கு 4 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வரை இணைக்கலாம்.

அவ்வாறு 4 வாக்குப்பதிவு இயந்திரங்களை இணைத்தாலும் 64 வேட்பாளர்களின் சின்னங்கள் மட்டுமே இடம் பெறும். அப்படியானால் 72 வாக்காளர்கள் போட்டியிடும் நிலையில் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இரா.கி.நகர் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுமா அல்லது வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படுமா என்ற ஐயம் எழுந்துள்ளது. எனினும்

வேட்பு மனுக்களை திரும்பப் பெற்ற பிறகே தேர்தல் ஆணையம் இது குறித்து முடிவு செய்யும் என்று தெரிகிறது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பாஜகவினர் முறைகேடாக பயன்படுத்தி தேர்தலில் வென்று வருகின்றனர் என்பது நீண்டகாலமாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி போன்றவர்கள் பழைய வாக்குச் சீட்டு முறையையே தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மின்னணு வாக்குப் பதிவுதான் வேண்டும் என ஒற்றைக்காலில் பாஜக அடம்பிடித்து வருகிறது. பாஜகவின் இந்த அடம் பிடித்தல் குறித்து தொடர்ந்து சந்தேகம் கிளப்பப்பட்டு வருகிறது.

தற்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பாஜக முறைகேடாக பயன்படுத்தி வெற்றி பெறுவதை உத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வேறு அம்பலப்படுத்தியிருக்கிறது.

அதிமுகவிற்கு இரட்டை இலை கிடைப்பது உட்பட எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த பாஜக, தங்கள் மீது சந்தேகம் எழாமல் இருப்பதற்காக ஒப்புக்கு தங்கள் வேட்பாளரையும் களம் இறக்கியிருக்கிறது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் தவிர்க்கப் பட்டால் அதிமுகவின் வெற்றி வாய்ப்பு முயற்கொம்பே! என்னசெய்யப் போகிறது பாஜக என்று பார்ப்போம் என்று பேசிக்கொள்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,627

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.