Show all

போராடி வேட்புமனுவை ஏற்கச் செய்தார் விஷால்

19,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5119: இரா.கி.நகர் இடைத்தேர்தலுக்கு விஷால் பதிகை செய்த வேட்புமனு இன்று மதியம் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், வேட்புமனு நிராகரிப்புக்கு எதிராக விஷால் சாலை மறியலில் ஈடுபட்டார்.

மேலும், தனக்கு முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டனர் என்று குற்றம் சாட்டினார். மேலும் அந்தக் குற்றச்சாட்டுக்கு வலுசேர்க்கும் விதமாக ஒலிப்பதிவு ஒன்று வெளியிட்டார். அந்த ஒலிப்பதிவு தீயாகப் பரவி வந்த நிலையில், தற்போது விஷால் வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஷால்,

தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி சரியான முடிவை அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் நேர்மையாகச் செயல்பட்டுள்ளது. நல்லது நடப்பதற்கு தடைகள் இருக்கும். நிறைய சுயேச்சை வேட்பாளர்கள் எனக்குத் துணையாக நின்றார்கள். அவர்களுடைய பெயர் கூட எனக்குத் தெரியாது. எனக்கு எதிராக யார் செயல்படுகிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. நான் நேர்மையான முறையில் தேர்தலைச் சந்திக்கவுள்ளேன். நாளை முதல் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடவுள்ளேன் என்று தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,627

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.