Show all

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 41 தொகுதிகளின் பட்டியல் வெளியீடு

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 41 தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை சந்தித்தார். அதற்குப் பிறகு காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டார்.

இது தொடர்பாக இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நாங்கள் கேட்ட தொகுதிகளை திமுக கொடுத்ததால் திருப்தியோடு இருக்கிறோம். கருணாநிதியை முதல்வராக்க காங்கிரஸ் கட்சி பாடுபடும் என்றார்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 41, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி தலா 5, புதிய தமிழகம் 4, பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி, சமூக சமத்துவப் படை ஆகியவற்றுக்கு தலா 1 என 7 கட்சிகளுக்கு 58 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில் காங்கிரஸுக்கான 41 தொகுதிகள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன.

காங்கேயம் தவிர அதிமுகவுடன் 40 தொகுதிகள் காங்கிரஸ் கட்சி நேரடியாக போட்டியிடுகிறது.

41 தொகுதிகள் விவரம்:

1 திருத்தணி

2 ராயபுரம்

3 மயிலாப்பூர்

4 அம்பத்தூர்

5 மதுரவாயல்

6 ஸ்ரீபெரும்புதூர் (தனி)

7 கோபிசெட்டிப்பாளையம்

8 காங்கேயம்

9 தாராபுரம் (தனி)

10 காரைக்குடி

11 மதுரை வடக்கு

12 திருமங்கலம்

13 முதுகளத்தூர்

14 நாங்குநேரி

15 திருச்சி கிழக்கு

16 வேதாரண்யம்

17 பட்டுக்கோட்டை

18 அறந்தாங்கி

19 குளச்சல்

20 விளவங்கோடு

21 சூலூர்

22 சிவகாசி

23 கிள்ளியூர்

24 ஸ்ரீவைகுண்டம்

25 தென்காசி

26 ஆற்காடு

27 ஓசூர்

28 கலசப்பாக்கம்

29 செய்யாறு

30 ஆத்தூர் (தனி)

31 சங்ககிரி

32 நாமக்கல்

33 கோவை தெற்கு

34 வேடசந்தூர்

35 காட்டுமன்னார்கோவில் (தனி)

36 முசிறி

37 ஜெயங்கொண்டம்

38 நன்னிலம்

39 பாபநாசம்

40 கரூர்

41 உதகமண்டலம்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.