Show all

பாமக உள்ளிட்ட 17 கட்சிகள் வலியுறுத்தல்! நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும்

21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம், தர்மபுரி ஆகிய ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று சேலம் இரும்பாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

இதில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற அயராது பாடுபடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக மருத்துவர் ராமதாசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:

சரக்கு-சேவை வரி காரணமாக கடந்த ஒரு ஆண்டில் 50 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளன. தொழில் வளர்ச்சியில் தமிழகம் 15வது இடத்தில் உள்ளது. பட்டப்படிப்பு படித்த 80 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்கு காத்திருக்கிறார்கள். அதேவேளை 10 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன.

தேர்தலில் வாக்குச்சீட்டு முறை தேவை என்று திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு உள்ளிட்ட 17 கட்சிகள் வலியுறுத்துகிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,871.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.