Show all

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு கேரள காதி வாரியம் கவனஅறிக்கை! கை ராட்டையைச் சுற்றியதால் சர்ச்சை

21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தனியார் துணி நிறுவன விளம்பரத்தில் நூல் நூற்கும் கை ராட்டையைச் சுற்றும் காட்சியில் நடித்ததால், பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு கேரள காதி வாரியம் கவனஅறிக்கை அனுப்பியுள்ளது. கேரளாவின் பெரிய திருவிழாவான ஓணம் இம்மாதம் கொண்டாடப்பட இருக்கிறது. அதையொட்டி, தனியார் நிறுவனங்களுக்குடன் போட்டிப் போட்டு சிறப்பு விற்பனை நடத்தி வருகிறது அம்மாநில அரசு காதி வாரியம்.  

இந்நிலையில், தனியார் துணி நிறுவன விளம்பரம் ஒன்றில் கை ராட்டை சுற்றுவது போன்ற காட்சியில் நடித்திருந்தார் மலையாள முன்னணி நடிகரான மோகன்லால். இதனால் அதிர்ச்சி அடைந்த கேரள காதி வாரியம், மோகன்லாலுக்கும், அவர் நடித்திருந்த நிறுவன உரிமையாளருக்கும் கவனஅறிக்கை அனுப்பியுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட அந்த விளம்பரத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கேரள காதி வாரியத் தலைவர் ஷோபனா ராஜ் கூறுகையில், 'கை ராட்டை மூலம் கதர் துணிகள் மட்டுமே தயாரிக்க முடியும். அதிலும் கை ராட்டை என்பது தேசத்தின் அடையாளங்களில் ஒன்று. ஆனால் மோகன்லால் ராட்டை சுற்றுவது போன்று நடித்திருக்கும் துணி நிறுவனம் காதி மற்றும் கை ராட்டைக்கும் சம்பந்தம் இல்லாதது என்பதால் மக்கள் நடுவில் குழப்பம் ஏற்படும் என்று கூறி அந்த விளம்பரத்தை திரும்பபெறும்படி கவனஅறிக்கை அனுப்பியுள்ளோம்' எனத் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,871.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.