Show all

சென்னையில் வசிப்போர் தீபாவளிக்கு சொந்தஊர் செல்ல 11,225 பேருந்துகள்

தீபாவளியையொட்டி, சென்னையில் இருந்து அக். 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 21,289 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் வசிப்போர் வெளியூர்களுக்குச் செல்ல வசதியாக 11,225 சிறப்புப் பேருந்துகள், சென்னையைத் தவிர்த்து தமிழகத்தின் இதர பகுதிகளில் வசிப்போர் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல 10,064 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 21,289 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று தமிழக அரசு வௌ;ளிக்கிழமை அறிவித்தது. தீபாவளி அக். 29-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் வசிப்பவர்கள் வெளியூர்களுக்குச் செல்ல வசதியாக 26-இல் 3,254 பேருந்துகளும், 27-இல் 3,992 பேருந்துகளும், 28-இல் 3,979 பேருந்துகள் என 11,225 பேருந்துகள் சென்னையில் இருந்து புறப்படும். சிறப்புப் பேருந்துகளை இயக்க கோயம்பேடைத் தவிர்த்து இதர பேருந்து நிலையங்களும் தயார் நிலையில் உள்ளன. ஆந்திர மாநிலத்துக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளும் அண்ணா நகர் மேற்கில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். இதேபோன்று, கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகளும், காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகளும், கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எதிரே உள்ள மாநில தேர்தல் ஆணையத்தின் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாகச் செல்லும் அனைத்து வழித் தட பேருந்துகளும், தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். பூந்தமல்லி வழியாக வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி, செங்கோட்டை, செங்காணாச்சேரி, கொட்டாரக்கரை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆற்காடு, ஆரணி, சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், பெங்களூர் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும். இதர பகுதிகளில் இருந்து....: தமிழகத்தின் இதர பகுதிகளில் இருந்து பல்வேறு கோட்டங்களின் சார்பிலும் 26-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை 10,064 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியையொட்டி, சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க அக்டோபர் 26, 27, 28 ஆகிய தேதிகளில் பேருந்துகள் நிறுத்துமிடம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலம் மார்க்கமாகச் செல்பவர்கள் அண்ணாநகர் மேற்கு பேருந்து நிலையம். புதுச்சேரி, கடலூர் செல்பவர்கள் கோயம்பேடு மாநில தேர்தல் ஆணையம் பேருந்து நிலையம். தஞ்சை, கும்பகோணம் செல்பவர்கள் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையம். வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் செல்பவர்கள் பூந்தமல்லி பேருந்து நிலையம். இதர பேருந்துகள் வழக்கம் போல கோயம்பேட்டிலிருந்து செல்லும். 3 பேருந்து நிலையங்களுக்குச் செல்ல கூடுதலாக இணைப்பு பேருந்துகள் தீபாவளியையொட்டி, சிறப்புப் பேருந்துகள் புறப்பட உள்ள பேருந்து நிலையங்களைச் சென்றடைய கூடுதலாக இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கோயம்பேடு, அதற்கு எதிரே பேருந்து நிலையங்களுக்கு போதுமான அளவு பேருந்து வசதி இருக்கின்றன. இதைத் தவிர்த்து, இதர மூன்று பேருந்து நிலையங்களைச் சென்றடைய கூடுதலாக இணைப்புப் பேருந்துகள் விடப்பட உள்ளன. 3 நாள்களுக்கும் சேர்த்து 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதன்படி, ஆவடி (70 கட்), செங்குன்றம் (114 கட்), தாம்பரம் (70வி கட்) ஆகிய இடங்களில் இருந்து அண்ணாநகர் மேற்கு பேருந்து நிலையத்துக்கு இணைப்புப் பேருந்துகள் கூடுதலாக விடப்படும். பிராட்வே (21ஜி), பிராட்வே (18ஏ), திருவான்மியூர் (91), திருவான்மியூர் (95), அடையாறு பேருந்து நிலையம் (99), சிறுசேரி ஐ.டி.பூங்கா (105), கோவளம் (டி151), செங்கல்பட்டு (500), வடநெம்மேலி (517), திருப்போரூர் (555) ஆகிய இடங்களில் இருந்து தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். செங்குன்றம் (62), அம்பத்தூர் எஸ்டேட் (65பி), தாம்பரம் (66), தியாகராயநகர் (49ஏ), பிராட்வே (54), கோயம்பேடு (153 கட்), திருவொற்றியூர் (101) ஆகிய இடங்களில் இருந்து பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு கூடுதலாக இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.