Show all

ஆன் லைன் மூலம் 40 நாட்களான பச்சை குழந்தை விற்பனை பெற்றோர் கைது

ஜெர்மனியில் பிறந்து 40 நாட்களான பெண் குழந்தையை பிரபல ஆன்லைன் தளமான ஈபே- யில் விற்க விளம்பரம் கொடுக்கபட்டு இருந்தது. இந்த சம்பவம் குறித்து டுயிஸ்பர்க் நகர காவல்துறையினர் குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்படுவதாவது: ஈபே- யில் மரியா என்ற 40 நாட்களான பெண் குழந்தையை 5000 யூரோவிற்கு (ரூ. 3.67லட்சம்) விற்க போட்டோவுடன் விளம்பரம் கொடுக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து பெற்றோர்களின் குடியிருப்பில் நடத்திய சோதனையில், குறித்த பதிவு அங்கிருந்த இணையதளம் மூலம் பதிவிட்டதற்கான ஆதாரம் சிக்கியது. மேலும் குறித்த இணைப்பை குடும்ப உறுப்பினர்கள் சிலரும் பயன்படுத்தி வந்துள்ளதாகவும். பெற்றோர்கள் அகதிகள் என தெரியவந்துள்ளது. மேலும். மனிதக் கடத்தல் என்ற சந்தேகத்தின் பேரில் பெற்றோர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.