Show all

குஜராத்தில் பின்லேடனுடன் இணைத்து கெஜ்ரிவால் சுவரொட்டி

டெல்லியில் நடைபெற்று வந்த கெஜ்ரிவால்-பா.ஜ.க மோதல் தற்போது குஜராத் வரை சென்றுள்ளது. குஜராத்துக்கு நான்கு நாள் பயணமாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சென்றுள்ளார். அங்கு யாரோ சில ஆசாமிகள் ஒசாமா பின்லேடன், ஹஃபீஸ் சையது உள்ளிட்ட தீவிரவாதிகளுடன் கெஜ்ரிவால் ஃபோட்டோவையும் இணைத்து, “பாகிஸ்தான் ஹீரோக்கள்” என்று சுவரொட்டியும் ஒட்டிவிட்டார்கள். இந்த சுவரொட்டியைக் கண்ட கெஜ்ரிவால் பா.ஜ.க தான் இந்த வேலையை செய்துள்ளது என்று கொதித்து போயுள்ளார். ஆனால் பா.ஜ.க.வோ இதை மறுத்திருக்கிறது. “சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் குறித்து தவறாக பேசிய கெஜ்ரிவாலை பா.ஜ.க. தான் விமர்சிக்க வேண்டும் என்றில்லை. நாட்டின் மேல் பற்றுள்ள யார் வேண்டுமானால் அவரை விமர்சிப்பார்கள்” என்று பா.ஜ.க கூறியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.