Show all

சோத்துப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

தேனி மாவட்டம் சில்வார்பட்டி பகுதியில் காய்ந்து வரும் நெற்பயிர்களை காப்பாற்ற சோகத்துப்பாறையில் இருந்து நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். பெரியகுளம் தாலுகா, சில்வார்பட்டியில் சிறுகுளம் கண்மாய் உள்ளது. வராகநதியில் வரும் நீரை வடுகபட்டி வெள்ளக்கரடு அணை அருகில் தடுப்பணை கட்டி அங்கிருந்து தனி வாய்க்கால் மூலம் நீர் கொண்டு நிரப்பப்படுகிறது. கண்மாயில் தேங்கும் நீரை ஆதாரமாக கொண்டு 200 ஏக்கர் பரப்பளவில் முதல்போக நெல்சாகுபடி நடந்தது.

தொடர்ந்து மழை பெய்ததால் மீண்டும் கண்மாய்க்கு நீர்வந்தது. இதனால் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சில வயல்கள் நடவு செய்து 45 நாட்களுக்குக்கு மேல் ஆனநிலையில் கதிர் வெளியேறி பால்பிடிக்கும் நிலையில் உள்ளன. இந்த நேரத்தில் கூடுதல் நீர் நெல் வயல்களுக்கு தேவைப்படும். மேலும் 30 நாட்கலுக்கு மேல் நீர் தேவைப்படும், ஆனால் தொடர் மழை இல்லாததால் வராகநதியில் நீர் வரத்து இல்லை. இதனால் நெல் வயல்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில்வார்பட்டியில் காய்ந்து வரும் நெல்வயல்களை பாதுகாக்க சோத்துப்பாறையில் இருந்து நீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரியுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.