Show all

திருச்சி மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து பொதுமக்கள் அவதி

திருச்சி அரியமங்கலத்தில், 47 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி குப்பைக் கிடங்கு அமைந்துள்ளது. இங்குள்ள குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி சுமார் 400 டன் கழிவுகள் இங்கு கொண்டு வரப்படுகின்றன.

இங்கு கொட்டப்படும் கழிவுகளை உரிய முறையில் அகற்றுவதில்லை என்பதால், அடிக்கடி தீ விபத்து ஏற்படும்போது, அதிகளவில் பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், நேற்றிரவு இந்த குப்பைக் கிடங்கு மீண்டும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது.எனவே, இந்த குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.