Show all

தமிழக அரசின் செயலுக்கு மாநில சிறுபான்மை கவுன்சில் கடும் கண்டனம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் ஆரம்பித்து வரும் செப்படம்பர் மாதத்துடன் 25 ஆண்டுகள் ஆகிறது. இதன் வெள்ளிவிழா நாளை திருநெல்வேலியில் நடக்கிறது. விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், கல்வித்துறை செயலாளர் ஆபூர்வா உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

நாளை பல்கலகழகத்திற்கு வேலை நாள் எனவும் இந்த விழாவில் பல்கலைகழக அனைத்து ஊழியர்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் எனவும், பல்கலைகழக மாணவ மாணவிகள் மற்றும் தனியார் கல்லூரி மாணவ மாணவிகளும் கலந்து கொள்ள வேண்டும் என சுற்றிக்கை அனுப்பட்டுள்ளது.

பல்கலைகழக விதிப்படி உள்ளிட்ட விடுமுறை தினங்களில் நிகழ்ச்சிகள் வைக்ககூடாது என தெரிவித்துள்ள நிலையில் விதியை மீறி ஞாயிற்றுக்கிழமை பல்கலைகழக வெள்ளிவிழா வைத்து சிறுபான்மை மாணவ மாணவிகளையும், பல்கலைகழக ஊழியர்களையும் கலந்து கொள்ள கட்டாயப்படுத்தும் தமிழக அரசின் உரிமை மீறல் செயலுக்கு மாநில சிறுபான்மை கவுன்சில் தலைவர் மீரான் மைதீன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.