Show all

இயங்கலை சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுப்பது மீதான ஏனும் இப்படியாவும்

உயிர்பலிகள் தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் இயங்கலை சூதாட்ட தடைக்கான சட்டமுன்வரைவுக்கு, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருவது தமிழர் நலம் சார்ந்த அரசியல் கட்சிகளையும், பொதுமக்களையும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. ஒப்புதல் மறுப்பிற்கான ஏன் என்பது, இப்படியா! என்று தமிழ்நாட்டு மக்களை மலைக்க வைப்பதாய் இருக்கிறது.

16,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: இயங்கலை சூதாட்ட தடைக்கான சட்ட முன்வரைவுக்கு, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒப்புதல் அளிக்காததற்குக் காரணம், டெல்லியில் இருக்கும் முதன்மையானவர்களின் தொப்புள் கொடி உறவுகளுக்கு இருக்கும் துடுப்பாட்ட சூதாட்ட நிறுவனத் தொடர்பு தான் என  மூத்த இதழியலாளர் மணியின் குற்றம்சாட்டு செய்தியாகி வருகிறது.

உயிர்பலிகள் தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் இயங்கலை சூதாட்ட தடைக்கான சட்டமுன்வரைவுக்கு, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருவது தமிழர் நலம் சார்ந்த அரசியல் கட்சிகளையும், பொதுமக்களையும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.

இந்நிலையில், ஆளுநர் ரவி, டெல்லியின் முதன்மைப் புள்ளிக்கும், அவரது உறவுக்கிளைக்கும் இருக்கும் துடுப்பாட்டத் தொடர்பு, துடுப்பாட்ட சூதாட்ட நிறுவனங்கள் தொடர்பு காரணமாகவே ஆளுநர் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார் என விமர்சித்துள்ளார் இதழியலாளர் மணி.

இயங்கலை ரம்மி போன்ற இணையவழி சூதாட்டங்களுக்குப் பலரும் அடிமையாகி பணத்தை இழந்ததுடன், தொடர் தற்கொலை நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் அதனைத் தடுக்க 'இயங்கலை சூதாட்ட தடை சட்டத்தை' இயற்றியது தமிழ்நாடு அரசு. இந்தச் சட்ட முன்வரைவிற்கு இதுவரை தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒப்புதல் தராமல் இருந்து வருகிறார். 

இதற்கிடையே ஏற்கெனவே நடைமுறையில் உள்ள அவசர சட்டமும் காலாவதியாகி விட்டது. தமிழ்நாட்;;டு அரசியல் கட்சிகளும், தமிழ்நாடு அரசும் தொடர்ந்து வலியுறுத்தியும் ஆளுநர் ரவி தாமதம் செய்து வருவது அரசியல் அரங்கில் பெரும் விவாதங்களைக் கிளப்பி இருக்கிறது. இதில் ஆளுநர் அரசியல் செய்வதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக மூத்த இதழியலாளர் மணி, இயங்கலை சூதாட்டம் என்பது வெறும் ரம்மி மட்டும் கிடையாது. துடுப்பாட்ட சூதாட்டம் இருக்கிறது. துடுப்பாட்ட சூதாட்ட நிறுவனமான ட்ரீம் லெவன் தான் துடுப்பாட்டப் போட்டிகளுக்கு வழங்குநராக இருக்கிறது. ட்ரீம் லெவனுக்கு பேரறிமுக துடுப்பாட்ட வீரர்கள் விளம்பர தூதுவர்களாக இருக்கிறார்கள். முதன்மையான ஒன்றிய அமைச்சர் ஒருவரின் குருதி உறவு துடுப்பாட்டத்தோடு தொடர்புடைய அமைப்பின் நிர்வாகியாக இருப்பது அனைவருக்கும் தெரியும். பல்லாயிரம் கோடி பணப் புழக்கம் கொண்டது இந்தத் துடுப்பாட்ட வெற்றியின் மீதான பந்தயம். அப்படியென்றால் எந்த சூதாட்ட கும்பலை காப்பாற்றுவதற்கு இந்த இயங்கலை சூதாட்ட தடைக்கான சட்டமுன்வரைவுக்கு கையெழுத்து போடாமல் காலம் தாழ்த்துகிறார் என்பது தெளிவாகவே புரிகிறது என்கிறார் மணி.

இயங்கலை சூதாட்ட தடை சட்டம் தொடர்பாக, தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசிடம் கேள்விகள் எழுப்பிய நிலையில், அதற்கு விளக்கம் அளிக்க நேரம் கேட்ட அமைச்சரை சந்திக்க மறுப்பது மோசமானது. அப்படி அவர் சந்திக்க மறுக்கவில்லை என்றால் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆளுநர் அலுவலகம் மறுப்பு தெரிவிக்க வேண்டியது தானே? அப்படியென்றால் இந்த ஆளுநர் ஒருதலைப் பட்சமாக நடந்துகொள்வது உண்மைதானே? அரசு ஒரு சட்டமுன்வரைவை நிறைவேற்றி அனுப்பினால் அதிகபட்சம் விளக்கம் கேட்கலாம், மீண்டும் அனுப்பினால், ஒப்புதல் அளிப்பதைத் தவிர தமிழ்நாட்டிற்கு ஒன்றிய பாஜக அரசு நியமித்துள்ள ஆளுநருக்கு வேறு வாய்ப்பே இல்லை. உச்ச அறங்கூற்றுமன்றம் பல பாடுகளில் தெளிவுபடுத்தியுள்ளதே என்று பொதுமக்கள் ஐயம் எழுப்பி வருகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,450.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.