Show all

அரசு பள்ளி ஆசிரியர்களின் அசத்தல்! தெலுங்கானா பள்ளியொன்றில் மாணவர்கள் நடத்தும் பள்ளிவங்கி

தெலுங்கானா பள்ளியொன்றில் மாணவர்கள் நடத்தும் பள்ளிவங்கி. மாணவர்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் அரசு பள்ளியின் நடவடிக்கைக்கு பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

14,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5124: மாணவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகைக்கு, தெலுங்கானாவில், ஒரு அரசு பள்ளி ஆசிரியர்கள் முயற்சியால், மாணவர்களால் பள்ளிக்குள் நடத்தப்படும் 'பள்ளி வங்கி' வங்கி செயலாக்கம் பெற்றிருக்கிறது.

தெலுங்கானா மாநிலத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்களால் நடத்தப்படும் வங்கி அம்மாநிலம் முழுவதும் புகழ்பெற தொடங்கி இருக்கிறது. சேமிப்பின் முதன்மைத்துவம் மற்றும் வங்கியில் பரிவர்த்தனை குறித்து மாணவர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில் தெலுங்கானா மாநிலம் சன்கோன் மாவட்டம் சில்பூரில் உள்ள அரசு பள்ளியின் ஆசிரியர்களும், நிர்வாகிகளும் பள்ளி வளாகத்திலேயே மாதிரி வாங்கி ஒன்றை திறந்துள்ளனர். மாணவ, மாணவியர் தான் இந்த வங்கியின் மேலாளர்கள், காசாளர்கள், ஊழியர்கள்.

அன்றாடம் வரிசையில் நிற்கும் மாணவர்கள் பற்றுத்தாள்களை நிரப்பி தங்கள் செலவுக்கு பெற்றோர் கொடுத்த பணத்தில் கொஞ்சம் பாதுகாப்பாக தங்கள் கணக்கில் வரவு வைக்கின்றனர். அதே முறையில் பணத்தையும் எடுக்கின்றனர். 'சில்பூர் பள்ளி வங்கி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வங்கியில் ஒரே மாதத்தில் சிறுக சிறுக பள்ளி மாணவர்கள் ரூ.42,000 வரை சேமித்து வைத்துள்ளனர். மாணவர்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் அரசு பள்ளியின் நடவடிக்கைக்கு பெற்றோர் மற்றும் கல்வி ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். பள்ளி வேலை நேரத்தில் 3 இடைவேளைகளில் சுமார் அரை மணி இந்த பள்ளி வங்கி செயல்பட்டு வருகிறது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,448.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.