Show all

துளிர்விக்கப்படும் மதவாதங்கள்! அரசியல் அமைப்புச் சட்டப்பாட்டு மதச்சார்பற்ற இந்தியாவில்

முஸ்லிம் மதம் பற்றி அவதூறாக பேசியதாக தெலுங்கானா மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் நேற்று கைது செய்யப்பட்டார். 

08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா தேசியப் பேரவைக் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் அண்மையில் வெளியிட்டிருந்த ஒரு காணொளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்தக்; காணொளியில் அவர், முஸ்லிம் மதம் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, பல்வேறு கட்சியினரும், ராஜா சிங்கிற்கு கண்டனம் தெரிவித்தனர். தெலுங்கானா மாநிலத்தில் பல இடங்களில் ராஜா சிங்கை கண்டித்து போராட்டமும் நடந்தது. மாநிலம் முழுதும் காவல்நிலையங்களில் ராஜா சிங்கிற்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் நேற்று, ராஜா சிங்கை, அவரது வீட்டில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில், அவர் பாஜகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட ராஜாசிங் தெரிவித்ததாவது: நான் வெளியிட்ட காணொளி, சமூக வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எதற்காக நீக்கப்பட்டது என தெரியவில்லை. இந்த வழக்கிலிருந்து வெளியில் வந்ததும் இரண்டாவது காணொளியை வெளியிடுவேன்.

ராமர், சீதை பற்றி அவதூறாக பேசிய முனவர் பரூக்கியை ஏன் கைது செய்யவில்லை. காவல்துறையினரிடம் கை கூப்பி வேண்டுகிறேன். தயவு செய்து இதுபோன்ற செயல்களை அனுமதிக்க வேண்டாம்; தர்மத்துக்காக தொடர்ந்து போராடுவேன். இவ்வாறு அவர் கூறினார். 

இதற்கிடையே இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து, மாநில பாஜக தலைவர் சஞ்சய் பந்தி, நேற்று ஹைதராபாதில் போராட்டம் நடத்தினார்.

அவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜகவின் இந்திய அளவில் ஆன தலைவர் நட்டா கூறுகையில், வரும் தேர்தல்களில் சந்திரசேகர ராவையும், அவரது கட்சியையும் தோற்கடிப்போம். மக்களாட்சி அடிப்படையில் போராடிய பாஜக மாநில தலைவர் சஞ்சயைக் கைது செய்ததை கண்டிக்கிறோம், என்றார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,350.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.