Show all

தொலைத்தொடர்பு கட்டணங்கள் 42 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளன.

ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய நடப்பில் உள்ள அனைத்து நிறுவனங்களின் செல்பேசி சேவைக் கட்டணங்கள் உயர்கின்றன நடப்புக் கிழமையிலேயே.

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஏர்டெல், வோடபோன், ஜியோ ஆகிய நடப்பில் உள்ள அனைத்து நிறுவனங்களின் செல்பேசி சேவைக் கட்டணங்கள் உயர்கின்றன. 

நாளை முதல் அந்த விலை உயர்வு நடைமுறைக்குவருகிறது. வோடபோன் பிற நிறுவன எண்களுக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு ஆறு காசுகள் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல்லும் செல்பேசி சேவைக் கட்டணத்தை 42 விழுக்காடு அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஏர்டெல் அளவில்லா அழைப்பு மற்றும் தரவு வகை விலை 28 நாட்களுக்கு 249 ரூபாயும், 82 நாட்களுக்கு 448 ரூபாயும் இருந்தன. தற்போது அந்த வகைகளின் விலை 298 ரூபாயாகவும், 598 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கான குறைந்தபட்ச கட்டணஏற்றம் 35 ரூபாயிலிருந்து 49 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிற தொலைத் தொடர்பு எண்களுக்கு செய்யப்படும் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 6 காசுகள் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, வோடபோனில் 84 நாட்களுக்கான தரவு, அளவில்லா அழைப்புகள் வகை 458 ரூபாயிலிருந்து 599 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. 28 நாட்களுக்கான தரவு, அழைப்புகள் வகை 199 ரூபாயிலிருந்து 249 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,354.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.