Show all

அதிரடி காட்டும் சுப்பிரமணியன்சாமி! இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம், மோடியுடன் உள்ள ஆமாம்சாமிகள்தான்

தமிழர்கள் ஓற்றைக்காசு அளவிற்கு கூட முன்னேறி விடக்கூடாது என்பதிலே மிகவும் கவனமாக காய்நகர்த்துகிறவர்தான் பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன்சாமி. ஆனால் மற்ற விசயங்களில் அவர் மிகப்பெரிய அறிவாளராகவே மிளர்வார். அவர் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம், மோடியுடன் உள்ள ஆமாம்சாமிகள்தான் என்றும் நிர்மலாவுக்கு பொருளாதாரமே தெரியாது என்றும் அதிரடி காட்டியுள்ளார்.

16,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழர்கள் உலக அளவில் எந்த மூலை முடுக்கிலும், ஓற்றைக்காசு அளவிற்கு கூட முன்னேறி விடக்கூடாது என்பதிலே மிகவும் கவனமாக காய்நகர்த்துகிறவர்தான் பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன்சாமி. ஆனால் மற்ற மற்ற விசயங்களில் அவர் மிகப்பெரிய அறிவாளராகவே மிளர்வார். அவர் இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம், மோடியுடன் உள்ள ஆமாம்சாமிகள்தான் என்றும் நிர்மலாவுக்கு பொருளாதாரமே தெரியாது என்றும் அதிரடி காட்டியுள்ளது இந்தியாவில் பரபரப்பு கிளப்பியுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் இந்தியத்தலைமைஅமைச்சர் நரேந்திர மோடியை சுற்றியுள்ள ஆமாம்சாமி கூட்டங்கள்தான் என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன்சாமி தெரிவித்தார். 

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2வது காலாண்டில் வெறுமனே 4.5 விழுக்காடு என்ற அளவில் உள்ளது என இந்திய அரசே தெரிவித்துள்ளது. எட்டு முதன்மை தொழிற்சாலைகளின் உற்பத்தி கடந்த அக்டோபரில் 5.8 விழுக்காடாகக் குறைந்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 4.5 விழுக்காடாக உள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சியாகும் இது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

நிர்மலா சீதாராமன் பொருளாதார வளர்ச்சி குறித்து இந்திய அரசு வெளியிடுவதற்கு இரு நாட்களுக்கு முன்னர் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் கூறுகையில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் என்றாலே என்னவென தெரியாது. தலைமைஅமைச்சரைச் சுற்றியுள்ள ஆலோசகர்கள், மோடியிடம் பொருளாதாரம் குறித்த உண்மை நிலையை கூறுவதற்கு அச்சப்படுகின்றனர். அதனால் பொய்யான வளர்ச்சியை கூறி நம்ப வைக்கின்றனர். நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 1.5 விழுக்காடு  அளவுக்கு கடுமையாகச் சரிந்திருக்கலாம். ஆனால் அவர்களோ 4.5 விழுக்காட்டு அளவிற்குதான் சரிவு உள்ளது என சொல்லிக் கொள்கிறார்கள். பொருளாதாரம் மேலும் சரிவை நோக்கி செல்வது என்பது தவிர்க்க முடியாதது. தலைமைஅமைச்சரிடம் யாரும் உண்மையைச் சொல்வதில்லை. அவரை சுற்றி ஆமாம்சாமி கூட்டங்களே உள்ளனர். அவரும் அவர்களையே விரும்புகிறார். என்னை போன்றோரை விரும்புவதில்லை என சுப்பிரமணியன் சுவாமி காட்டமாக தெரிவித்தார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,354.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.