Show all

இளையராசா இன்று பதவி ஏற்கிறார்! மாநிலங்களவை உறுப்பினராக

நேற்று மாலை இளையராசா டெல்லி சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு குதுகல வரவேற்பு அளிக்கப்பட்டது.

09,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: பேரறிமுக இசை அமைப்பாளர் இளையராசா, அண்மையில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக குடிஅரசு தலைவர் மூலம் நியமிக்கப்பட்டார். 

அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவிட்டு சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பிய இளையராசாவுக்கு, சென்னை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 

தற்போது பாராளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக இளையராசா இன்று பதவி ஏற்றுக்கொள்கிறார். 

தொடர்ந்து தலைமைஅமைச்சர் மோடியை சந்தித்து பேசுவார் என்று சொல்லப்படுகிறது. இதற்காக நேற்று மாலை இளையராசா டெல்லி சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு குதுகல வரவேற்பு அளிக்கப்பட்டது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,320.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.