Show all

பாஜகவின் சொத்து மதிப்பு ரூ.5000 கோடிக்கு மேல் உயர்ந்தது எப்படி? வினா எழுப்புகிறார் திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர்

பாஜக கட்சியின் தமிழ்நாடு கிளையின் தலைவர் அண்ணாமலையிடம், திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி எழுப்பிய இரண்டு வினாக்கள் தமிழ்நாட்டில் இன்றைய முதன்மை பேசுபொருளாகியுள்ளது.  

11,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: பாஜகவின் சொத்து மதிப்பு ரூ.5000 கோடிக்கு மேல் உயர்ந்தது எப்படி? சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க எங்கிருந்து பணம் வருகிறது என்று பாஜக கட்சியின் தமிழ்நாடு கிளையின் தலைவர் அண்ணாமலையிடம், திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி எழுப்பிய இரண்டு வினாக்கள் தமிழ்நாட்டில் இன்றைய முதன்மை பேசுபொருளாகியுள்ளது.  

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, ரூ.214 கோடியாக இருந்த பாஜகவின் ஒட்டுமொத்த சொத்து இன்று ரூ.5200 கோடிக்கு மேல்  உயர்ந்துள்ளது. ஊழலை ஒழித்துவிட்டோம் என்று கூறிவிட்டு, இந்த ரூ.5200 கோடி வருமானம் எப்படி வந்தது என்று அவர்களால் கணக்கு காட்ட முடியுமா? 

உண்மையில்- வருமானவரி விலக்கு மற்றும் அன்பளிப்பு என்கிற  அடையாளத்தை உள்ளே சொருகி கொள்கின்றனர். இந்த எட்டு ஆண்டுகளில் பாஜவுக்கு இவ்வளவு பணம் எப்படி வந்தது. இதற்கான விளக்கம் இருக்கிறதா? 

அதானி, அம்பானி என்கிற பெரும் பணக்காரர்கள் அரசு பணத்தை சுரண்டுவதற்கு, அரசு நிறுவனத்தை வாங்குவதற்கு சட்டப்படியாக பேரம் பேசிவிட்டு சட்ட விதிகளை மீறி, சட்டத்துக்கு உட்பட்டு பணம் கொடுப்பதாக பல ஆயிரம் கோடிகளை பாஜவுக்கு கொட்டி கொடுத்துள்ளனர் என்பதுதான் மறைபொருளாக இருக்கிற விளக்கம்.

இப்படி கொல்லைப்புறத்தில் ஊழலை செய்து விட்டு, 'நாங்கள் ஊழலை ஒழிக்க போகிறோம் என்று அண்ணாமலை சொல்வது மிகப் பெரிய விந்தையாக உள்ளது. 

கெஜ்ரிவால் இன்றைக்கு டெல்லியில் அறிக்கை விட்டிருக்கிறார்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்காக ரூ.10ஆயிரம் கோடிக்கு மேல் பாஜக பயன்படுத்தி உள்ளதாக சொல்லியிருக்கிறார். இவர்களின் நடவடிக்கை இந்திய மக்களாட்சிக்கு ஆபத்தான போக்காக உள்ளது. இது கள்ளப்பணமா, காந்தி கணக்கு பணமா என்பதற்கு அண்ணாமலை விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். 

தமிழ்நாட்டின் பாஜக கிளைத் தலைவர் அண்ணாமலை ஒன்று செய்யலாம். தலைமை அமைச்சர் மோடிக்கு மடல் எழுதி, எப்படி பாஜவின் சொத்து மதிப்பு இத்தனை கோடி எப்படி உயர்ந்தது, ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தில் இத்தனை கோடி ஒன்றிய அரசுக்கு இழப்பு ஏற்பட்டது எப்படி? 3 ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய பணக்காரராக அம்பானி எப்படி மாறமுடிந்தது என்று அவரிடம் கேட்டு சொல்லட்டும். அப்படி செய்தால் உண்மையிலேயே அண்ணாமலையை பாராட்டலாம். என்று பாஜக கட்சியின் தமிழ்நாடு கிளையின் தலைவர் அண்ணாமலையிடம், திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தி இரண்டு வினாக்களை எழுப்பி, உரிய விடையளிப்பது எப்படி என்பதற்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,353.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.