Show all

விற்பனைக்கு! ஏர்இந்தியா, மற்றும் பாரத் பெட்ரோலியம்.

ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை நடப்பு நிதியாண்டில் விற்பனை செய்து ரூ.ஒரு லட்சம் கோடிக்கு மேல் பணம் ஈட்டி, இவ்விரு நிறுவனங்களின் பிரச்னைகளை தீர்க்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்னும் ஐந்து மாதங்களுக்குள் ஏர்இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களை விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், இந்த ஆண்டு- ஏர்இந்தியா, மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களின் பிரச்னைகள் முடிவுக்கு வர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். கள நிலவரங்கள் குறித்து ஆராயப்படும். ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க சர்வதேச முதலீட்டு நிறுவனங்கள் பலவும் ஆர்வம் காட்டி வருகின்றன என்று தெரிவித்துள்ளார். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,339.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.