Show all

டைட்டன் நிறுவனம் பெருமிதம்! தமிழ், தமிழ்ப்பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டாடும் கைக்கடிகாரங்கள் வெளியீடு

‘நம்ம தமிழ்நாடு’ என்ற பெயரில் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலைகளைப் போற்றும் விதமாக கடிகாரத் தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது டைட்டன் நிறுவனம்.

01,கார்த்திகை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ‘நம்ம தமிழ்நாடு’ என்ற தலைப்பில்- தமிழ், தமிழ்ப்பண்பாட்டு அடையாளங்களைக் கொண்டாடும் கைக்கடிகாரங்கள் வெளியிட்டு பெருமிதத்தை வெளிப்படுத்தியிருக்கிறது டைட்டன் கடிகார நிறுவனம்.

‘நம்ம தமிழ்நாடு’ என்ற பெயரில் தமிழ் மொழி மற்றும் தமிழ் கலைகளைப் போற்றும் விதமாக கடிகாரத் தொகுப்பை அறிமுகம் செய்துள்ளது டைட்டன் நிறுவனம். டைட்டன் தன்னுடைய கடிகாரங்களில் எண்களைத் தமிழ் மொழியில் பதித்துள்ளது. ஒன்று, இரண்டு மூன்று என தமிழில் எழுதியுள்ளது.

அத்துடன் உள் வடிவமைப்பில் தமிழ்நாட்டுக் கோவில் தூண்கள், யாழி, கோபுரங்களைப் பொறித்துள்ளது. அவற்றிற்கு ‘நம்ம தமிழ் நாடு கடிகாரம்’ என்றும் பெண்களுக்கான கடிகாரங்களில் காஞ்சிபுரம் புடவைகளில் பதிக்கப்படும் மயில் கோலத்தை உள்ளே பதித்து, அதை காஞ்சிபுரம் கடிகாரம் என்றும் கூறியுள்ளது.

டைட்டனின் இயங்கலை இணையதளத்தில் இந்தத் தமிழ் வெளியீடு குறித்து குறிப்பிட்டுள்ளது. அதில் ‘உலகிலேயே கலாச்சாரம் நிறைந்த பழமையான மொழி தமிழ். அதன் கட்டிடக் கலைகளும் அதன் பிரமாண்டத்தை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. காஞ்சிபுரம் பட்டு, தூய முசுக்கொட்டைப் பட்டு நூலால் நெய்யப்பட்டு அதன் பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது. இப்படி ஒட்டுமொத்த பாரம்பரியத்தையும் அடக்கிய தமிழ்நாடு எங்களை வெகுவாகக் கவர்ந்ததாலேயே இந்தத் தொகுப்பை அறிமுகம் செய்கிறோம் என்று கெத்து காட்டியுள்ளது.

வாருங்கள் தமிழர்களே! ‘நம்ம தமிழ் நாடு கடிகாரம்’ விற்பனையை முன்னெடுத்து, தலைப்பாக்கி- நம்ம தமிழுக்கு நாமும் பெருமை சேர்ப்போம். 

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,339.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.