Show all

காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில்! அமித்ஷா உளறல், பிரலாத் ஜோஷி மொழிபெயர்ப்புக் குளறுபடியால்

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கர்நாடக மாநிலத்துக்கு வரும் 29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5120ல் (12.05.2018) சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க காங்கிரசும், ஆட்சியை பிடிக்க பாஜகவும் பாடாய்படுகின்றன.

இந்தத் தேர்தல் கருத்துப் பரப்புதலுக்காக பெங்களூரில் முகாமிட்டுள்ளார் அமித்ஷா. இவர் தவாங்கிரியில் கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஊழலுக்காக போட்டி அமைத்தால் அதில் எடியூரப்பாவின் ஆட்சிதான் முதலிடத்தை பிடிக்கும் என்றார்.

எடியூரப்பா பாஜகவின் முதல்வர் வேட்பாளர் என்பதை மறந்து சொந்த கட்சிக்காரரையே அமித்ஷா ஊழல்வாதி என்று கூறியதால் கர்நாடக பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர். 

அமித்ஷா கர்நாடக மாநிலத்தில் தேர்தல் கருத்துப் பரப்புதலின் போது அவர் ஹிந்தியில் பேசுவதை பாஜக பாஉ பிரலாத் ஜோஷி கன்னடத்தில் மொழிபெயர்த்தார். அப்போது ஏழைகளுக்கும், தலித்துகளுக்கும் சித்தராமையா ஒன்றும் செய்யமாட்டார் என அமித்ஷா பேசியதை- நரேந்திர மோடி அரசு ஏழைகளுக்கும் தலித்துகளுக்கும் ஒன்றுமே செய்யாது என ஜோஷி மொழிபெயர்ப்பு செய்தார்.

இது கர்நாடக காங்கிரஸுக்கு வாக்களிக்குமாறு பாஜகவினரே பிரசாரம் செய்வது போல் இருந்தது. இதனால் பாஜக தொண்டர்கள் கடும் அதிருப்தியிலும் அச்சத்திலும் உள்ளனர். பொறுப்புடன் செயல்பட வேண்டியவர்கள் இவ்வாறு பொது இடத்தில் கண்டபடி உளறுவது கட்சிக்கு ஆபத்தை கொடுக்கும் என்று உணர வேண்டும் என்று பாஜக தொண்டர்கள் முணுமுணுத்தனர். இதற்குதானே நாடே ஆசைப் படுகிறது பாலகுமாரா!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,741.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.