Show all

காவிரிமேலாண்மை வாரியம் அமைக்காது என்று, பாஜக நிலைபாட்டை போட்டு உடைக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி விவகாரத்தில் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவதால், மேலாண்மை வாரியம் அமைந்துவிடும் என்றால் தானும் பதவி விலகிடத் தயார் என்று நடுவண் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஏன்? எதனால்? என்று காரணம் எதுவும் தெரிவிக்க வில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சஅறங்கூற்றுமன்றம் விதித்த ஆறு வாரக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், இதுவரை வாரியம் அமைப்பதற்கான எந்தப் பணியையும் நடுவண் அரசு முன்னெடுக்கவில்லை. இதனால் நடுவண் அரசைக் கண்டித்து அரசியல் கட்சிகள் மற்றும் உழவர் அமைப்புகள் தொடர்ந்து போரட்டம் நடத்தி வருகின்றன. தமிழக பஉக்கள் நடுவண் அரசைக் கண்டித்து பதவி விலகவேண்டும் என்கிற கோரிக்கையும் வலுத்துள்ளது. 

இந்நிலையில், நடுவண் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இதழியலாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகலால் எல்லாம் காவிரி மேலாண்மை வாரியம் அமைந்து விடுமா என்று கேள்வி எழுப்பினார். தமிழக பஉக்கள் பதவி விலகுவதால்; காவிரி மேலாண்மை வாரியம் அமைந்துவிடும் என்றால், நானும் பதவி விலகத் தயாராக இருக்கிறேன். ஆனால், பதவி விலகுவதால் எதுவும் நடந்துவிடாது. என்று தெளிவாகவும் உறுதியாகவும் தெரிவிப்பதிலிருந்து, என்ன காரணம் பற்றியோ பாஜக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது என்று பாஜக மேல்மட்ட நிலைபாட்டை போட்டு உடைக்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,741.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.