Show all

முதல்வர் ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து! பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் கட்சி தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வு

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், 'பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள். இந்தியாவின் மதச்சார்பற்ற - அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பண்புகளைக் காக்க நாம் அனைவரும் போராடி வரும் இந்த முதன்மைத் தருணத்தில் நாட்டின் பழம்பெரும் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு கார்கே தேர்வாகியுள்ளார். தமது புதிய பொறுப்பில் அவர் வெற்றி காண வாழ்த்துகிறேன்.' என்று வாழ்த்தியுள்ளார்.

03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்கு பின்பு முன்னெடுக்கப்பட்ட தேர்தலில், அகில் பாரதிய காங்கிரஸ் குழுவின் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றுள்ளார்.

பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மல்லிகார்ஜூன கார்கே 7,897 ஓட்டுகள் பெற்று வெற்றிப்பெற்றார். மற்றொரு வேட்பாளரான சசிதரூர் 1,072 ஓட்டுகள் மட்டுமே பெற்று பின்தங்கினார். இதனால், மல்லிகார்ஜூன கார்கே அகில் பாரதிய காங்கிரசின் தலைவராகிறார்.

பாரதிய ராஷ்டிரிய காங்கிரசின், 137 ஆண்டு கால வரலாற்றில் தலைவர் பதவிக்கு, ஆறாவது முறையாக நடந்த தேர்தலில் 22 ஆண்டுக்குப் பின், நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மல்லிகார்ஜூன கார்கேவை , சோனியா, பிரியங்கா நேரில் சந்தித்து , பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

ராகுல் வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியுள்ளதாவது: பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் தலைவராக தேர்வான மல்லிகார்ஜூனா கார்கேவுக்கு வாழ்த்துகள். இந்தியாவின் மக்களாட்சிக் கொள்கையை பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் தலைவர் பிரதிபலிக்கிறார் எனக்கூறியுள்ளார்.

பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், 'பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகள். இந்தியாவின் மதச்சார்பற்ற - அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய பண்புகளைக் காக்க நாம் அனைவரும் போராடி வரும் இந்த முதன்மைத் தருணத்தில் நாட்டின் பழம்பெரும் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு கார்கே தேர்வாகியுள்ளார். தமது புதிய பொறுப்பில் அவர் வெற்றி காண வாழ்த்துகிறேன்.'

பாமக நிறுவனர் ராமதாஸ், 'பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடியவர். தொண்டர்களின் தலைவர். அவரது தலைமையில் பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் வலுப்பெற வாழ்த்துகள்.'

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, 'மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மதிமுக சார்பில் இதயப்பூர்வமான வாழ்த்துகள்.'

தமாகா தலைவர் ஜி.கே.வாசன், 'பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு தமாகா சார்பில் நல்வாழ்த்துகள்.' இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், பாமக தலைவர் அன்புமணி, காந்தி போரம் தமிழ்நாட்டுக் கிளை தலைவரும், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருமான குமரி அனந்தன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி, தமிழில் குறிப்பிடும் போது மட்டுமே தங்கள் கட்சியை இந்திய தேசிய காங்கிரஸ் என்று குறிப்பிடுகிறது. ஹிந்தியில் குறிப்பிடும் போது பாரதிய ராஷ்டிரிய காங்கிரஸ் என்றே பேசுகிறது. 

நாவலந்தேய இந்தியாவை உலகினரும் தமிழர்களும் இந்தியா என்று குறிப்பிடுகிற நிலையில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பாரத் என்றே பேசுகின்றன. பாரதிய ஜனதா கட்சி தமிழில் இந்திய மக்கள் கட்சி என்று குறிப்பிடப்படுவதில்லை. பாரதிய ஜனதா கட்சி என்றே பேசப்படுகிறது. இந்தியா
மற்றும் பாரத் என்கிற பெயர்களில் உள்ள அரசியலை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நாம் முன்னெடுக்கும் பேச்சாகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,407.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.