Show all

தமிழ்நாட்டிலிருந்து ஒரு உறுப்பினருக்கும் இடமளிக்கப்படவில்லை! இந்திய அலுவல் மொழிக்கான அறிக்கை வெளியிட்ட அமித்சா குழுவில்

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா பதிகை செய்த அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 11-வது அறிக்கை மீது நாடு தழுவி ஹிந்தி திணிப்பு புகார் எழுந்துள்ளது. 

02,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா பதிகை செய்த அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் 11-வது அறிக்கை மீது ஹிந்தி திணிப்பு புகார் எழுந்துள்ளது. 

இந்த வகையில் கடந்த நாற்பத்தியாறு ஆண்டுகளாக இயங்கிவரும் ஒன்றிய அலுவல்மொழிப் பிரிவுக்கு உள்ள ஆலோசனைக் குழுவில் மக்களவை 20, மாநிலங்களவை 10 என 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போதுள்ள இக்குழுவில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு உறுப்பினரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக அமைச்சர் அமித்சா உள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவல் மொழிக்குழுவின் 37-வது கூட்டம், 195 நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளுடனான, ஆட்சி மொழிக்குழுவின் 11-வது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு 43 நாட்களுக்கு முன்பு அமித்சா அனுப்பி இருந்தார். 

இதில் தொழில் கல்வி உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் உயர்கல்வியிலும் ஒன்றிய அரசு ஹிந்தி மொழி திணிப்பு செய்வதாகப் புகார் கிளம்பியது. தமிழ்நாட்டில் அனைத்;து கட்சிகளும் போராட்டங்களை தொடங்கியுள்ளன. இதேபோல், ஹிந்தி பேசாத இதர மாநிலங்களிலும் அமைச்சர் அமித்சாவின் அறிக்கை மீதான எதிர்ப்பு எழுந்துள்ளது.

வேக வேகமாக வலுப்பெறும் இந்தப் போக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் வரவுள்ள மக்களவை தேர்தலில் தங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் என பாஜக அஞ்சத் தொடங்கி உள்ளது. இதன் மீது புகார்களும் கருத்துகளும் நாடு முழுவதிலும் உள்ள தங்கள் கட்சி தலைவர்களிடமிருந்து பாஜக தலைமைக்கு வந்தவண்ணம் உள்ளன. தமிழ்நாட்டு பாஜகவினர் கண்மூடித்தனமாக அமித்சா அறிக்கையை கொண்டாடி வருவது, தமிழ்நாட்டில் பாஜகவின் எதிர்காலம் குறித்து தலைமைக்கு அச்சமூட்டுவதாகவும் அறியப்படுகிறது. 

இந்நிலையில், அந்த அறிக்கையில் சில முதன்மைத் திருத்தங்களை செய்து மீண்டும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்ப அமித்சா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,406.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.