Show all

தேர்வு புறக்ணிப்புக்கு தீர்வாக, காப்பியடிக்க அனுமதிக்கும் யோசனையை முன்வைக்கும் யோகி ஆதித்யநாத்

29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5119: அன்றாடம் ஒரு சரவெடி, பகடி, அதிரடி என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வித்தியாசமாக எதாவது சொல்லிக் கொண்டே இருக்கிறார். இவர் காவி தொடர்பாக பேசும் எல்லா விசயங்களும் அகில இந்திய தீப்பொறி ரகம். காவி எவ்வளவு பிடிக்குமோ அவ்வளவு பசுமாடும் பிடிக்கும். பசுக்களைப் பாதுகாக்க இவர் சொல்லும் திட்டங்கள் எல்லாம் வயிற்றை கலங்க வைக்கும்.

இந்தநிலையில் இவர் மாணவர்களின் கல்வி குறித்து பேசியுள்ளார். தேர்வில் காப்பி அடிக்க அனுமதிக்கவில்லை என்றால் யாரும் தேர்வு எழுத மாட்டார்கள் என்று கூறியுள்ளார்.

உபியில் தற்போது பள்ளி இறுதி ஆண்டு தேர்வு நடந்து வருகிறது. இதுவரை நடந்துள்ள 4 தேர்வுகளில் மொத்தம் 10 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை. இதில் 10 மற்றும் 12வதுவகுப்பு பொதுத்தேர்வும் அடக்கம். என்ன காரணம் இதற்கு? யோகி ஒரு காரணம் சொல்லி இருக்கிறார். அதில் ‘மாணவர்களுக்கு கடினமாக கேள்வி கேட்டால் இப்படித்தான் செய்வார்கள். அவர்களுக்கு இனி எளிதாக கேள்வி கேளுங்கள். அவர்களை தேர்வு அறைக்கு கொண்டு வாருங்கள் என்றுள்ளார்.

அதோடு நிற்காமல் தேர்வில் மாணவர்களை காப்பி அடிக்க விடாமல் நிறைய விதிமுறைகள் இருக்கின்றன. இதன் காரணமாகவே பலர் தேர்வு எழுத மாட்டேன் என்கிறார்கள். இதனால்தான் இந்த முறை 10 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை என்றும் கூறியுள்ளார்.

வழக்கறிஞர் தேர்வுக்கு புத்தகம் அனுமதிக்கப் படுவது போல், தேர்வில் பின்பற்ற வேண்டியதொரு நல்ல திட்டம் அவரிடம் இருந்தாலும், அதை தெளிவாக வரையறுக்க தெரியவில்லை. பேசுவதற்கு முன் துறை சார்ந்த அறிஞர்களோடு கலந்தாலோசித்திருந்தால், நல்ல முறையில் வெளிப்படுத்தியிருப்பார். அவருடைய இந்த எண்ணம் உறுதியாக நையாண்டிக்கு உரியது அல்ல.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,695

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.