Show all

இடைக்கால தடைக்கு மறுப்பு! அனைத்து சாதியினரும் போற்றியர் (ஓதுவார்) ஆகலாம் என்கிற தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு

அனைத்து சாதியினரும் போற்றியர் (ஓதுவார்) ஆகலாம் என்கிற தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்ச அறங்கூற்றுமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள இந்தச் சிறு வெற்றியையும் கொண்டாடுவோம், பெரிய வெற்றிக்குச் செப்பனிட்ட பாதையாக இந்தக் கொண்டாட்டம் அமைய. 

14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: அனைத்து சாதியினரும் போற்றியர் (ஓதுவார்) ஆகலாம் என்கிற தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க உச்ச அறங்கூற்றுமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

பாஜக கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச அறங்கூற்றுமன்றம், தமிழ்நாடு அரசு விடையளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.

அனைத்து சாதியினரும் போற்றியர் (ஓதுவார்) ஆகலாம் என்கிற வகையில் திமுக அரசு பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது. 

வாதம், வம்பு, வழக்கு என்கிற நெடிய வரலாற்று தொடர்ச்சியில், தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றிருக்கிற திமுக அரசு- பட்டியல் இனத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 28 பேர்களை கடந்த ஆண்டு இதே மாதம் போற்றியர்களாக நியமித்தது. 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரும் போற்றியர் (ஓதுவார்) ஆகலாம் என்கிற தமிழ்நாடு அரசின் திட்டத்திற்குத் தடை கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி உச்ச அறங்கூற்றுமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதன் விசாரணை நேற்ற நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்ச அறங்கூற்றுமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், சுப்ரமணியின்சாமி மனுவிற்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்கக் கோரி கவனஅறிக்கை அனுப்பிய உச்ச அறங்கூற்றுமன்றம் வழக்கை ஒத்தி வைத்துள்ளது. ஏற்கனவே போற்றியர் (ஓதுவார்) நியமனம் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளைச் சேர்த்து இந்த மனு விசாரிக்கப்படும் என அறங்கூற்றுமன்றம் அறிவித்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,356.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.