Show all

அன்னியப் பொருட்களை இறக்குமதி செய்யுமளவிற்கு, ஏற்றமதி இல்லாத மோசமான இந்தியா

08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான வித்தியாசத்தையே நாம் வர்த்தகப் பற்றாக்குறை என அழைக்கிறோம். ஒரு நாட்டின் ஏற்றுமதி அதிகமாக இருந்தால் இது நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவும், அதுவே இறக்குமதி அதிகமாக இருந்தால் நாணய மதிப்பு சரியும். இதுமட்டும் அல்லாமல் பொருளாதாரத்தையும் வர்த்தகச் சந்தையையும் விரிவாக்கம் செய்ய வேண்டும், அதோடு உலக நாடுகளின் தேவையை உணர்ந்து பொருட்களைத் தயாரிக்க வேண்டும் என்பதும் உணர்த்தும் நிலை இது. 

    தற்போது இந்தியா இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்ட நிலையில் தான் உள்ளது. இந்தியாவில் அதிகளவிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் கடந்த மாதத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கும் மத்தியிலான வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு 16.3 பில்லியன் டாலர் அளவை அடைந்துள்ளது. இது கிட்டத்தட்ட 56 மாத உயர்வு என்பது குறிப்பிடத்தக்கது.   

    கடந்த மாதத்தில் வெளிநாடுகளில் இருந்து வைரம் மற்றும் கச்சா எண்ணெய் அதிகளவில் இறக்குமதி செய்துள்ள காரணத்தால் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பை விட அதிகமாக உள்ளது. 

    கடந்த மாதங்களில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியதும், வர்த்தகப் பற்றாக்குறை 56மாதஉயர்வு நிலையில் இருப்பதற்கும் முதன்மைக் காரணமாக உள்ளது. 

    நிதி அமைச்சகம் வெளியிட்ட தகவல்களில் படி கடந்த மாதத்தில், விற்பனை பொருட்களின் இறக்குமதி 26.1 விழுக்காடும், வைரம் மற்றும் இதர விலை உயர்ந்த கற்களின் இறக்குமதி 55.7 விழுக்காடும், பெட்ரோலியம் 42.6 விழுக்காடும் உயர்ந்துள்ளது. கடந்த 10 மாதங்களில் வர்த்தகப் பற்றாக்குறை 131 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது, இது கடந்த நிதியாண்டில் 88 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,704

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.