Show all

சீனத்தின் மாண்டரினை ஆட்சிமொழியாக்கி சீனத்துடன் கைகோர்க்கும் பாகிஸ்தான்

08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக மாண்டரினை அங்கீகரிப்பதற்கான தீர்மானத்திற்கு அந்நாட்டின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் ஆட்சிமொழியாக உருது மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகள் உள்ளன. இந்நிலையில், சீன மொழியான மாண்டரினை பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக அங்கீகரிப்பதற்கான தீர்மானம் அந்நாட்டின் செனட் சபையில் நேற்று கொண்டுவரப்பட்டது.

இதற்கு செனட் சபை உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் உருது, ஆங்கிலத்தை தொடர்ந்து மாண்டரினும் பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக உள்ளது. மாண்டரின் பாகிஸ்தானின் ஆட்சிமொழியாவதன் மூலம் இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான உறவு மேலும் ஆழமடைந்து, பொருளாதார வளர்ச்சி மேம்படும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து, அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி கீச்சுவில் பதிவு செய்திருப்பதாவது, ‘கடந்த 70 ஆண்டுகளில், பாகிஸ்தான் மக்களுடைய தாய் மொழியாக இல்லாத நான்கு மொழிகளுக்கு ஊக்கமளித்துள்ளது ஆங்கிலம், உருது, அரபிக் மற்றும் இப்போது மாண்டரின்

இந்தியாவில் பொருளாதார வாயிலாக இருக்கிற, தமிழகத்தின் மொழியாகிய தமிழ்,

இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட 22அட்டவணை மொழிகளுக்கு சமமாக அங்கிகரிக்கப் பட்டிருந்த போதும், தமிழை ஆட்சி அதிகாரப் புழக்கத்தில் அனுமதிக்க ஹிந்தி ஆட்சியாளர்களுக்கு மனம் இல்லாமலே இருக்கிறது.

தமிழ்! அப்படி அனுமதிக்கப் படும் போது இந்தியாவின் பொருளாதார நிலை இன்னும் உயரும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,704

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.