Show all

கமலின் புதியகட்சி அறிமுகவிழா பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பங்கேற்கிறார்

08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மதுரையில் நடிகர் கமலின் புதிய கட்சி அறிமுக விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் நாளை மதுரை வருகிறார்.
    

மதுரையில் நாளை நடிகர் கமல் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகளை அறிவிக்கிறார். இதற்காக ஒத்தக்கடையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பது உறுதியாகி உள்ளது. இவரது பயணத் திட்டம் குறித்து அதிகாரிகள் கூறியது: 
நாளை காலை புதுடெல்லியிலிருந்து புறப்படும் அரவிந்த் கெஜ்ரிவால், விமானத்தில் சென்னை வழியாக மாலை 4.40 மணிக்கு மதுரை வருகிறார். அழகர்கோவில் சாலையிலுள்ள அரசு விருந்தினர் மாளிகைக்குச் செல்லும் அவர், இரவு 7 மணிக்கு ஒத்தக்கடை பொதுக்கூட்டத்தில் கமலுடன் பங்கேற்று பேசுகிறார்.
  

 மறுநாள் காலை 7.50 மணிக்கு மதுரையில் இருந்து விமானத்தில் புறப்படும் கெஜ்ரிவால், சென்னை வழியாக புதுடெல்லி செல்கிறார்.
    

கெஜ்ரிவால் வருகையையொட்டி, அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை நகர், புறநகர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

    -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,704 
 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.